சிறு வயதை நினைப்படுத்தும் யானைக்குட்டிகளின் சண்டை வீடியோ! மனம் மயக்கும் வைரல் வீடியோ

Baby elephants video viral: நீயா நானா என செல்லச்சண்டை போடும் யானைக்குட்டிகளின் சண்டை வீடியோ! மனம் மயக்கும் வைரல் வீடியோ

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 17, 2023, 01:51 PM IST
  • அஞ்சு வயசு வரைக்கும் பங்காளி! அதுக்கு பிறகு பகையாளி!
  • உறுதிப்படுத்தும் யானைச் சண்டை வீடியோ
  • குட்டி யானைகளின் செல்லக் குறும்பு வீடியோ வைரல்
சிறு வயதை நினைப்படுத்தும் யானைக்குட்டிகளின் சண்டை வீடியோ! மனம் மயக்கும் வைரல் வீடியோ title=

இயற்கையான யானைச் சண்டை வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் வெளியாகும் பல்வேறு செய்திகள் அறிவுக்கு தீனி போடுபவை. மனதில் இருக்கும் வருத்தங்களை போக்கும் மருத்துவராய் செயல்படும் இணையத்தை, இணக்கமில்லாமல் நன்றி மறந்து பேசலாமா?  இப்படி ஒரு கேள்வி என்று வினா எழுகிறதா? வாழ்க்கையில் மனதை லேசாக்கும் பணியில் இடைவிடாது தொடர்ந்து சேவை செய்து வரும் சமூக ஊடகங்களுக்கு என்ன கைமாறு செய்ய முடியும் என்ற கேள்விக்கு, வதந்திகளைப் பரப்பாதீர்கள் என்பது மட்டுமே ஒற்றை பதிலாக இருக்கும்.

இணைத்தின் வீச்சின் ஒரு புறம், கவலை, அவதூறு ஏமாற்றம் என்றால், ஆக்கப்பூர்வமான முகமாக, சமூக ஊடகங்களில் வைரலாகி அனைவரையும் கவரும் வீடியோக்கள் மனதிற்கு இதமளிக்கின்றன. இணையத்தில் வெளியாகும் சில வீடியோக்கள் மனதை நெகிழ்விக்கின்றன. அவற்றில், சிலவற்றில் உபயோகமான தகவல்கள் இருக்கின்றன. இப்படி, சமூக ஊடகங்கள் நமது வாழ்வில் இன்றியமையாத இடத்தை பிடித்துவிட்டன.  

சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் பல தகவல்களை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் மனதை லேசாக்கும் வீடியோக்களும் நம்மை மகிழ்விக்கின்றன. ஆனால், மறுபுறம் நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள, இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் உதவுகின்றன.

மேலும் படிக்க | மனதை மயக்கும் இயற்கையின் வண்ணங்கள்! பார்க்க பார்க்க வியப்பூட்டும் நீரூற்று! 

அதிலும் இயற்கையின் படைப்பில், அனைவரையும் அதிசயப்பட வைக்கும் யானைகளையும் அவற்றின் வாழ்க்கைமுறையையும் பார்த்தால் அசந்து போகாமல் இருக்க முடியாது. பிரம்மாண்டமான உயிரினமான அவற்றின் பேரழகு அனைவரையும் மயக்குவது. அழகிய இயற்கை சூழலில் வளரும் யானைகளும் குறும்பு செய்யும் என்று நாம் நினைத்து பார்த்திருக்க மாட்டோம்.

வித்தியாசமான வீடியோக்களை கிளிக் செய்யும் வாய்ப்பு கிடைப்பவர்கள், அதன் தன்மையை உணர்ந்து, உடனே சமூக ஊடகங்களில் பகிர்வது இன்றைய டிரெண்டிங். தற்போது இணையத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் அழகிய வீடியோ,  வியப்பை ஏற்படுத்துகிறது. இப்படியும் யானை குறும்பு செய்யுமா என்ற ஆச்சரியம் ஏற்படுகிறது.

வீடியோவை பார்த்து ரசியுங்கள்...

இந்த வீடியோவைப் பார்த்தால், அடுத்து என்ன நடக்கிறது என்பதே மறந்து போய்விடுகிறது. மனதை கொள்ளைக் கொள்ளும் குட்டி யானைகளின் சுட்டி வீடியோ இது.

பார்த்தாலே பரவசம் தரும் வீடியோவில், இரு யானைகள் நின்றுக் கொண்டிருக்கின்றன. அவை ஒன்றை ஒன்று காலால் உதைத்துக் கொள்வதைப் பார்த்தால், நமது இளம் வயது குறும்புகள் நினைவுக்கு வருகின்றன. அருமையான, ஆனால் பார்க்க அரிதான இந்த செல்லக்குட்டிகளின் குறும்பை படம்பிடித்து, நமக்காக பதிவிட்டிருக்கிறார்களே என்று மகிழ்ச்சி ஏற்படுகிறது.

அழகு கொஞ்சும் குறும்பு

மனிதர்களை பரவசப்படுத்தும் இயற்கையின் அதிசயங்களில் ஒன்று விலங்குகள். வைரலாகி வரும் வீடியோவில், குட்டி யானை அழகா, இல்லை, அதன் குறும்பு அழகா என்று புரியாமல், மீண்டும் மீண்டும் வீடியோவைப் பார்த்து ரசிக்கிறோம். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரின் மனதையும் மயக்கிவருகிறது.   

மேலும் படிக்க | மனிதர்களை ரொம்ப நம்புறீங்கப்பா! மான்களை கலாய்க்கும் வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News