Toll Plaza Viral Video: ஆந்திராவில் தமிழக கல்லூரி மாணவர்களுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 10 பேர் காயம் அடைந்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதியில் உள்ள ஒரு சுங்கச்சாவடியில் பணம் செலுத்தும் பிரச்சனையால் தமிழகத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டதை அடுத்து, இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. மாணவர்கள் சுங்கச்சாவடி ஊழியர்களை ஹெல்மெட்டால் வெறித்தனமாகத் தாக்கியதுடன், அங்கிருந்த சில வாகனங்களையும் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகின்றன. ஆந்திர மாநிலத்தின் வடமலாபேட்டாவில் உள்ள ஒரு சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் செலுத்தியதாகக் கூறி, தமிழக மாணவர்கள், சுங்கச்சாவடி ஊழியர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே வலுத்த சண்டையில், தமிழகத்தைச் சேர்ந்த 10 மாணவர்கள் காயம் அடைந்தனர் மற்றும் அவர்களது கார்கள் சேதமடைந்தன. இது தொடர்பான வீடியோ வைரலாகிறது.



ஊடகச் செய்திகளின்படி, மாணவர்கள் தேர்வு முடிந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​சட்டக்கல்லூரி மாணவர் ஒருவரின் வாகனம் டோல் பிளாசாவில் நிறுத்தப்பட்டது. அவரது ஃபாஸ்டேக் கட்டணம் வேலை செய்யவில்லை. அதையடுத்து, அங்கிருந்த சுங்கச்சாவடி ஊழியர், சம்பந்தப்பட்ட மாணவரின் காரை பின்னால் நகர்த்துமாறு அறிவுறுத்தினார். அவரின் காருக்குப் பின்னால் வரிசையாக நிற்கும் மற்ற வாகனங்களுக்கு வழி விடுவதற்காக சுங்கச்சாவடி ஊழியர் இவ்வாறு கூறியதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | மாநில அரசு சேனலுக்கு தடை - எதிர்ப்பை பதிவு செய்யுங்கள்... மநீம கோரிக்கை


இதையடுத்து ஏற்பட்ட குழப்பத்தால், மாணவர்கள் ஊழியர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனால், சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும், சுங்கச்சாவடியினருக்கும் ஏற்பட்ட மோதலால், அங்கு விரைந்து வந்த போலீசார், சாலையில் வாகனங்கள் செல்வதைத் தடுக்க வேண்டாம் என்று எச்சரித்தனர்.


ஆனால், மாணவர்கள் விடாப்பிடியாக தமிழக பதிவெண் கொண்ட கார்களுக்கு வழிவிட்டு ஆந்திராவில் இருந்து வந்த கார்களை வழிமறித்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த போலீசார், விசாரணையை தொடங்கியுள்ளனர்.


இந்த விவகாரம் தொடர்பாக, தமிழகத்தைச் சேர்ந்த பல தலைவர்களும், அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உடனடியாக ஆந்திர மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.


மேலும் படிக்க | தீபாவளிக்கு விற்பனை அமோகம்! இது டாஸ்மாக் மது விற்பனை சாதனை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ