வாணியம்பாடி சந்தையில் தள்ளுவண்டி வியாபாரிகளிடம் அத்துமீறிய செயல்பட்ட நகராட்சி ஆணையர் மன்னிப்பு கோரினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாணியம்பாடி சந்தையில் ஊரடங்கு உத்தரவினை மீறி காய்கறி விற்றதாக தள்ளி வண்டி வியாபாரிகளிடம் செவ்வாய்கிழமை வனியாம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் அத்துமீறி நடந்துக்கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில் தற்போது அவர் தனது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


முன்னதாக செவ்வாயன்று வெளிவந்த ஒரு வீடியோவில், ஆறு மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆணையர், ஒரு சந்தை வழியாக நடந்து, பழங்களுடன் இருந்த தள்ளு வண்டிகளை கவிழ்த்து, பழங்கள் மற்றும் காய்கறிகளை தரையில் கொட்டி வீண்டித்தார். மற்றும் அப்பகுதியில் உள்ள வர்த்தகர்களை மிரட்டுவதைக் காண முடிந்தது.



இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, அதிகாரியின் நடத்தை குறித்து கேள்வி எழுப்பியது. மற்றும் அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் என பலரும் அதிகாரியின் செயல்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்தனர்.


இந்த விமர்சனத்தைத் தொடர்ந்து, நகராட்சி ஆணையர் புதன்கிழமை விற்பனையாளர்களை அணுகி மன்னிப்பு கோரியுள்ளார்.


வீடியோ ஆதாரங்கள் இருந்தபோதிலும், அவர் மீது அதிகாரப்பூர்வ நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பான ஊடக அறிக்கைகளை மாநில மனித உரிமைகள் ஆணையம் கவனித்துள்ளது.


இதுகுறித்து ஆணையர் சிசில் தெரிவிக்கையில்., அந்த சந்தையில் கடைகளை அமைக்க வேண்டாம் என்று நாங்கள் மக்களுக்கு தெளிவான உத்தரவுகளை வழங்கியிருந்தோம். காலையில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட மக்கள் கூட்டத்தை ஈர்த்தது. கோயம்பேடு சந்தையை போன்ற மற்றொரு சூழ்நிலையை நாங்கள் விரும்பவில்லை. அதன் காரணமாகவே விதிகளை மீறிய மக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தூண்டியது என தெரிவித்துள்ளார்.


தனது சொந்த நடவடிக்கை குறித்து ஆராய்ந்த பின்னர் மன்னிப்பு கோரியதாகவும் சிசில் கூறுகிறார். "நான் இதைப் பற்றி யோசித்தேன், மிகவும் மோசமாக உணர்ந்தேன், அதனால் நானே சென்று மன்னிப்பு கேட்டேன். எந்த அதிகாரிகளிடமிருந்தும் எனக்கு அழைப்புகள் அல்லது ஆர்டர்கள் எதுவும் கிடைக்கவில்லை" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.