தமிழகத்தில் தேர்தல்களம் களைகட்டியுள்ள நிலையில், வேட்பாளர்கள் தங்கள் சொத்து விவரங்களை தெரியப்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளைச் சேர்ந்த பல முன்னணி அரசியல்வாதிகள் தங்களது அறிக்கைகளில் தங்களிடம் உள்ள தங்கத்தின் அளவுகளைப் பற்றி  கூறியுள்ளனர். எனினும், ஒரு சுயேட்சை வேட்பாளர் அதை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றுள்ளார். ஆம்!! தனது வேட்பு மனு மற்றும் பிரமாணப் பத்திரம் ஆகியவற்றை தாக்கல் செய்யும் போது, ​​ஹரி நாடார், தனது கழுத்து, மணிக்கட்டு, விரல்கள் என பல இடங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தங்க ஆபரணங்களை அணிந்து வந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

39 வயதான ஹரி, தமிழ்நாட்டின் (Tamil Nadu) தெற்குப் பகுதியில் உள்ள திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் இருந்து போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவரது பிரமாணப் பத்திரத்தின் படி, அவர் ரூ .12.61 கோடிக்கும் மேலான மதிப்பிலான அசையும் சொத்துக்களை வைத்திருக்கிறார். அதில் ரூ .4.73 கோடிக்கு தங்க நகைகளை மட்டுமே உள்ளன. இவை 11.2 கிலோ எடையுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஹரி நாடாரின் பிரமாணப் பத்திரத்தின் படி, அவர் ஒரு வணிகர் மற்றும் ஒரு சமூக சேவகர் ஆவார். அவர் மீது 15 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும் அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவர் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். 


ALSO READ: TN Elections 2021: தமிழகதில் ஏப்ரல் 6 ஆம் தேதி பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு:


ஹரி நாடார் வேட்பு மனு தாக்கல் செய்யும் ஒரு வீடியோ வைரலாகியுள்ளது (Viral Video). அந்த வீடியோவில், அவர் கிலோ கனக்கில் தங்க நகைகளை அணிந்து, வேட்பு மனு தாக்கல் செய்து மற்ற ஆவணங்களை சமர்பிப்பதைக் காண முடிகிறது. 


பனங்காட்டுப்படை கட்சியின் சார்பாக ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் ஹரிநாடார், தன்னிடம் 4.73 கோடி மதிப்புள்ள 11 கிலோ 200 கிராம் தங்க நகைகள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்திருக்கிறார்.


ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல்கள் (TN Assembly Election) நடக்கவுள்ளன. 


ALSO READ: இந்த முறை உண்மை பேசும் எனக்கு வாக்களியுங்கள்: அரவக்குறிச்சியில் அண்ணாமலை பிரச்சாரம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR