TN Election 2021: அதிமுக கூட்டணிக்கு பின்னடைவு, திமுக வெற்றிப் பாதையில் -ABP CVoter கருத்துக் கணிப்பு

தி.மு.க இந்த முறை ஆட்சியைப் பிடிக்கும் என்று ஏபிபி சிவோட்டர் கருத்துக் கணிப்பு 2021 தெரிவித்துள்ளது. எதிர்வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெறும் என ABP CVoter கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. இது அதிமுக-பாஜக கூட்டணிக்கு பின்னடைவாக இருக்கலாம் என்று கூறுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 17, 2021, 07:47 AM IST
  • திமுக தலைமையிலான கூட்டணிக்கு 43%
  • அதிமுக கூட்டணிக்கு 30.6% வாக்கு
  • மக்கள் நீதி மய்யம் கட்சி 7% வாக்குகளைப் பெறும் என கருத்துக் கணிப்பு
TN Election 2021: அதிமுக கூட்டணிக்கு பின்னடைவு, திமுக வெற்றிப் பாதையில் -ABP CVoter கருத்துக் கணிப்பு  title=

புதுடெல்லி: தி.மு.க இந்த முறை ஆட்சியைப் பிடிக்கும் என்று ஏபிபி சிவோட்டர் கருத்துக் கணிப்பு 2021 தெரிவித்துள்ளது. எதிர்வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெறும் என ABP CVoter கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. இது அதிமுக-பாஜக கூட்டணிக்கு பின்னடைவாக இருக்கலாம் என்று கூறுகிறது.

திமுக தலைமையிலான கூட்டணி 43% வாக்குகளைப் பெற்று 161 முதல் 169 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று ABP CVoter கருத்துக் கணிப்பு கூறுகிறது.

அதிமுக (AIADMK) தலைமையிலான கூட்டணி 30.6% வாக்குகளுடன் 53 முதல் 61 தொகுதிகளையே பெற வாய்ப்பு உள்ளது என்றும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. 
மக்கள் நீதி மய்யம் கட்சி (MNM) 7% வாக்குகளைப் பெற்று 2 முதல் 6 இடங்களிலும் அமமுக (AMMK) கட்சி 6.4% வாக்குகளுடன் 1 முதல் 5 இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளதாக ABP CVoter கருத்துக்கணிப்பு கூறுகிறது.

Also Read | புதுச்சேரியில் காங்கிரஸ் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, நாராயணசாமி பெயர் இல்லை

தமிழ்நாடு தேர்தல்களில் 2021இல் அதிமுக-பாஜக கூட்டணியால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று இந்த தேர்தல் முன்கணிப்பு கூறுகிறது. மனநிலை திமுக மீது சாய்ந்திருப்பதாகத் தெரிகிறது என்றும் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் எம்.கே.ஸ்டாலினை அடுத்த முதல்வராக விரும்புகிறார்கள் என்றும், தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு 29.7 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக இந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது. அதிமுக-பாஜக கூட்டணி 53-63 இடங்களை வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மிக முக்கியமான பிரச்சினையாக இருப்பது   வேலையின்மை என்று 38.2 சதவீத மக்கள் கூறியுள்ளனர், 11.6 சதவீதம் பேர் மின்சாரம் மற்றும் நீர் மிகப் பெரிய பிரச்சனை என்று தெரிவித்துள்ளர்.  சட்டம் ஒழுங்கு முக்கிய பிரச்சனை என்று 10.4 சதவீதம் பேர் தெரிவித்தனர். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6 ம் தேதி நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதியன்று எண்ணப்படும். 

 

Also Read | போதை ஏறினா ஏன் இங்கிலீஷ்ல பேசனும்? இதோ அறிவியல் காரணம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News