தக்காளி வரத்து குறைவால் நாடு முழுவதும் தக்காளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தவறிய பருவமழை காரணமாக ஏற்பட்ட விளைச்சல் குறைவு, தக்காளி விலை ஏற்றத்துக்கு பிரதானமாக கூறப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி வியாபாரிகள் சிலர் பதுக்கல் நடவடிக்கையிலும் இறங்கியதாக குற்றசாட்டுகள் எழுந்த நிலையில் நேற்று தக்காளி விலை திடீரென குறைந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்: குழிக்குள் சிக்கிய ஜேசிபி: - வைரல் வீடியோ


ஆனால் இந்த விலை குறைவு 24 மணி நேரம் கூட நீடிக்கவில்லை. இன்று மீண்டும் தக்காளி விலை 130-ஐ கடந்துவிட்டது. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மட்டுமல்லாது, தக்காளி விலையேற்றத்தைத் தொடர்ந்து மற்ற காய்கறிகளின் விலையும் ஏறிவிட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கையில் நேரடி தாக்கத்தையும், நெருக்கடியையும் ஏற்படுத்தியிருக்கும் இந்த விலையேற்றம் குறித்து காமெடியாக பல வீடியோக்களும் மீம்ஸ்களும் இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கின்றன.


அந்தவகையில் தமிழ்நாட்டில் ஒரு வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் தக்காளி லோடு ஏற்றிச் செல்லும் லாரியில் இருக்கும் இளைஞரிடம் தக்காளி கொஞ்சம் கொடுக்குமாறு கேட்க, அவரும் பின்னால் மோட்டார் சைக்கிளில் வரும் இளைஞர்களுக்கு தக்காளியை தூக்கிப்போடுகிறார். இந்த வீடியோவானது, வேலூர் அடுத்த கொணவட்டம் பகுதியில் உள்ள சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் எடுக்கப்பட்டிருக்கிறது.



அங்கு தக்காளியை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்றுள்ளது. அப்போது,அந்த வழியாக இருசக்கர வாகனத்தில்  பயணித்த வாலிபர் தக்காளி விலை அதிகமாக உள்ளது. தக்காளி வேண்டும் கொஞ்சம் கொடுங்கள் எனக் கெஞ்சிக் கேட்டுள்ளார். உடனே, லாரியில் இருந்த நபர் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாலிபரிடம் தக்காளியை ஒன்றன் பின் ஒன்றாக தூக்கி வீசினார்‌. அந்த தக்காளியை இருசக்கர வாகனத்தில் செல்லும் இளைஞர்கள் பத்திரமாக கேட்ச் பிடித்து வைத்துக் கொண்டனர். இந்த வீடியோ பொதுமக்கள் மத்தியில் சிரிப்பை ஏற்படுத்தி உள்ளதோடு, சமூக வலைதளங்களின் வைரல் ஆகிவருகிறது.


மேலும் படிக்க |  பூனைகள் பேசுமா? பேசுதே!! இணையவாசிகளுக்கு ஷாக்.... நம்ப முடியாத வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ