மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்: குழிக்குள் சிக்கிய ஜேசிபி: - வைரல் வீடியோ

உலகம் முழுவதும் மழை வெள்ளமென பெய்து வரும் நிலையில், பல்வேறு தவிர்க்க முடியாத அசம்பாவிதங்களும் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 8, 2023, 09:31 AM IST
  • பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கும் கனமழை
  • மழையில் அடித்துச் செல்லப்படும் கார்கள்
  • டெல்லியில் குழிக்குள் சிக்கிய ஜேசிபி இயந்திரம்
மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்: குழிக்குள் சிக்கிய ஜேசிபி:  - வைரல் வீடியோ title=

பருவமழை உலகம் முழுவதும் தொடங்கியிருப்பதால், பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஸ்பெயினில் வரலாறு காணாத வகையில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் முக்கிய நகரங்கள் முழுவதும் வெள்ளாக்காடாக மாறியுள்ளன. குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த வெள்ள நீர், ஆறுபோல் வேகமாக பாயந்து ஓடிக் கொண்டிருக்கின்றன. சாலைகளில் எல்லாம் நீர்வழிப்பாதையாக மாறியிருக்கின்றன. வீடுகளுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் எல்லாம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

தரமில்லாத வீடுகளும் நீரில் அடித்துக் செல்லப்படுகின்றன. இதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் இதனால் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். மழை எப்போது நிற்கும் என்ற கவலையில் அவர்கள் ஆழ்ந்துள்ளனர். மழை நீரில் கார்கள் அடித்துச் செல்லப்படுவதை பார்க்கவே இதயம் பதைப்பதைக்கிறது. 

இன்னொரு இடத்தில் சாலையில் தண்ணீர் வேகமாக சென்று கொண்டிருக்க, அதனை பொருட்படுத்தாமல் பெண் ஒருவர் குழந்தையை சக்கர வண்டியில் தள்ளிக் கொண்டு சென்றார். அப்போது அவரால் வெள்ளத்துக்குள் செல்லா முடியாத நிலை ஏற்பட்டு, நிலை தடுமாறி கீழே விழச் சென்றனர். உடனே அருகில் இருப்பவர் ஓடிச் சென்று குழந்தையை பத்திரமாக காப்பாற்றி அந்தப் பெண்ணையும் அழைத்து வந்தார். ஸ்பெயினில் இந்த நிலை என்றால், இந்தியாவிலும் பல இடங்களில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்திருக்கிறது.

டெல்லியில் மழையால் ஏற்பட்ட சேதங்களை அகற்ற சென்ற ஜேசிபி எந்திரம் ஒன்று திடீரென சாலையில் ஏற்பட்ட பளத்தில் சிக்கியது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் கடும் மழை காரணமாக கார் ஒன்று காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. சில இடங்களில் திடீரென தோன்றிய நீர்வழிப்பாதைகள் சாலைகளை அடித்துச் சென்றுவிட்டன.

இதனால், குறிப்பிட்ட இடங்களுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்ல முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. வெளி இடங்களின் தொடர்பு கிடைக்காத நிலை உருவாகியுள்ளதால், அடிப்படை தேவைகளான பால் பொருட்கள் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.  

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News