வைரல் வீடியோ: காலில் சுற்றிய பாம்பைப் பற்றி கவலைப்படாமல் நடந்து போகும் பெண்ணைப் பார்த்து பதறும் நெட்டிசன்கள்! உண்மையில் இது பாம்பா இல்லை பழுதா என எண்ண வைக்கும் பாம்பு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது, இதைப் பார்த்து அனைவரும் தலையை சொறிந்து கொண்டிருக்கிறார்கள். பயத்தையும் ஆச்சரியத்தையும் இந்த வீடியோவில் ஆபத்தான பாம்பு ஒன்று அழகான பெண்ணின் காலில் சுற்றியுள்ளது. ஆனால், பாம்பைப் பற்றி கவலைப்படாமல் அந்தப் பெண் நடந்து செல்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடக்கும் பெண்ணை விடாக் கொண்டனாக பாம்பு கவ்விப் பிடித்தால், அதை கண்டு கொள்ளாமல், கொடாக் கண்டனாக அந்த இளம் பெண் செல்வது ஆச்சரியமான அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ​​வைரலான வீடியோவை பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது? 



ஆபத்தான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இப்படிப்பட்ட வீடியோவைப் பார்த்தால் ஆச்சரியமாகவும் விநோதமாகவும் இருக்கின்ரன. இந்த வீடியோவில் காணப்படும் பெண், ஆபத்தான பாம்புடன் மிகவும் நட்பாக நடந்து கொள்வதாக தெரிகிறது. இந்த வினோத வீடியோ சமூக ஊகடங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது.


பாம்பு என்றதும் நமக்குத் தான் பயம், ஆனால் பெண்ணின் முகத்தில் துளி கூட பயம் தெரியவில்லை. இந்த வைரல் வீடியோ கூகுளில் டிரெண்டிங் ஆகிறது.


இருந்தாலும் காலை சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது என்பதுபோன்ற பல பழமொழிகளும் காரணம் இல்லாமல் நினைவுக்கு வருகின்றன.


பாம்பென்றால் பத்தும் பறக்கும் என்ற பழமொழி இந்தப் பெண்ணுக்கு ஒத்துவரவில்லை. இந்த வீடியோவைப் பார்த்த பிறகு உங்களுக்கும் இதே எண்ணம் எழலாம்.


மேலும் படிக்க | பாம்புடன் காரில் பயணம் செய்ததுண்டா? அப்படி ஒரு திகில் பயணத்தின் வீடியோ வைரல் ஆகியுள்ளது


இந்தக் காணொளியின் தொடக்கத்தில், ஆபத்தான பாம்பு ஒன்று இளம் பெண்ணின் காலில் சுற்றிக் கொண்டிருப்பதைக் காணலாம். பாம்பை பார்த்தாலே அது மிகவும் கனமாக இருப்பது தெரிகிறது, அதனால்தான் அந்த பெண்ணாலும் வேகமாக நடக்க முடியவில்லை.


சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவையும் கண்டிப்பாக பார்த்தால் ஆச்சரியப்படும் நெட்டிசன்கள், இது வளர்ப்பு பாம்பாக இருக்கும் என்பதை சுலபமாக கண்டு கொள்கின்றனர். 


மேலும் படிக்க | தங்கையின் முதல் நடையால் பூரிப்படைந்த குட்டி அண்ணன்: நெட்டிசன்கள் பாராட்டும் வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ