இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், சமூக ஊடகங்கள், தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்திருப்பதற்கான ஒரு சிறந்த வழியாக உருவெடுத்துள்ளது. மலேசியாவில் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. சமூக ஊடகத்தின் மூலம் இங்கு ஒரு பெண் சிறு வயதில் பிரிந்த தன் தந்தையை கண்டறிந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மலேசியாவில் வசிக்கும் சிந்தா என்ற பெண், தனது குழந்தை பருவத்தில் தனது தந்தையிடன் இருந்து பிரிந்து விட்டார். சிந்தாவிற்கு அவலது தந்தையின் நினைவாக, தனது தந்தையுடன் எடுத்த ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே வைத்திருந்தார்.


உள்ளூர் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சிந்தா, ' நான் மிகவும் சிறு வயதாக இருந்தபோது, ​​என் பெற்றோர் அந்த நேரத்தில் விவாகரத்து செய்தனர். இதற்குப் பிறகு நான் என் தந்தையைக் கண்டுபிடிக்க பல முறை முயற்சித்தேன். ஆனால் தோல்வியையே சந்தித்தேன். ஆனாலும், நான் மனம் தலரவில்லை. 18 வயதான நிலையில், மறுபடியும் அப்பாவை தேட ஆரம்பித்தேன். அப்போது எனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டேன். இந்த புகைப்படம் என் தந்தையுடன் நான் எடுத்துக் கொண்ட புகைப்படம்.


மேலும் படிக்க | ‘வசூல் ராஜா MBBS’ பாணியில் நடந்த ஹைடெக் காப்பி..!!


சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட இந்த புகைப்படத்துடன், 'இந்த புகைப்படத்தில் இருப்பவரை யாராவது பார்த்திருக்கிறீர்களா? இது பல வருடங்கள் முன் எடுத்தது. இப்போது அவர் தோற்றத்தில் மாற்றம் இருக்கலாம். ஆனால் யாருக்காது இவரைப் பற்றி தெரியும் என்றால் உடனே தெர்விக்கவும்’  என உதவி கோரியிருந்தார்.



இதை பதிவை கண்ட ட்விட்டர் பயனர்கள் அவருக்கு அவரை கண்டிபிடிக்க உதவியதில், சிறுவயதில் பிரிந்த தனது தந்தையை ட்விட்டர் மூலம் கண்டறிந்துள்ளார். அதுவும் வெறும் 24 மணி நேரத்திற்குள் தந்தையின் முகவரியைக் கண்டுபிடித்தார் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ட்விட்டரில், அஸ்மி என்ற நபர், சித்தனுக்கு செய்தி அனுப்பும்போது, ​​​​இது போன்ற ஒரு நபரைப் பார்த்ததாகக் கூறினார். தவறாக இருக்கலாம் ஆனால் ஒரு முறை சரி பார்க்க வேண்டும்.


இங்கு, அஸ்மி சொன்ன நபரைப் பற்றி சிந்தா அறிந்தபோது, ​​அவர் தனது தந்தை என்று தெரிய வந்தது.  ஆனால், அவரிடம் போன் இல்லை. இதனால் அவரால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இறுதியில்,  பக்கத்து வீட்டுக்காரரின் உதவியுடன், தந்தையும் மகளும் வீடியோ அழைப்பில் தொடர்பு கொண்டனர். அதே நேரத்தில், தந்தை-மகளின் இந்த உணர்ச்சிகரமான இந்த பாசக் கதை சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.


மேலும் படிக்க | நடுவானில் ஒரு அற்புதமான காதல் நடனம்; இது கழுகுகளின் காதல் வீடியோ!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR