வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாய்கள் மனிதர்களுக்கு மிகவும் பிடித்தமான விலங்குகள். அதிகமாக வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளும் இவைதான். நாய்களின் விசுவாசம், தன்னை வளர்ப்பவர்கள் மீது, அவர்களின் குடும்பத்தின் மூது இவை காட்டும் அன்பு, இவற்றின் புத்திசாலித்தனம் ஆகியவற்றை பார்த்து நாம் ஆச்சரியப்படுவதுண்டு. இவற்றை எடுத்துக்காட்டும் பல வீடியோக்களை நாம் தினம் தினம் சமூக ஊடகங்களில் பார்த்து வருகிறோம். ஆனால், தற்போது இணையத்தில் வைரல் ஆகிவரும் வீடியோ (Viral Video) ஒன்று மிக வித்தியாசமாக உள்ளது. இதில் நாம் பார்க்கும் விஷயத்தை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. 


ஆம்!! இந்த வீடியோவில் நாம் காணும் நாய்க்கு கூட்டல் கழித்தல் எல்லாம் தெரிந்திருக்கிறது. அதனுடைய முதலாளி அதனிடம் சில கூட்டல் கழித்தல் கணக்குகளை கேட்க அது தன் கால்களை ஆட்டி சரியான விடையை மிக துல்லியமாக சொல்கிறது. உதாரணமாக, கேட்கப்பட்ட கணக்கின் விடை 3 என்றால், அது தனது கால்களை மூன்றுமுறை ஆட்டுகிறது. 


மேலும் படிக்க | திருமணத்தை தெறிக்கவிட்ட மணமகளின் ஆட்டம்.... சான்சே இல்ல: சொக்கிய நெட்டிசன்கள், வீடியோ வைரல்


இணையத்தில் மாஸ் கிளப்பிய நாயின் வீடியோவை இங்கே காணலாம்:



வீடியோ வைரல் ஆனது


இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் iam.a.girl.scout என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதில் வீடியோவில் காணப்படும் நபரும் நாயும் மிக உற்சாகமாக இருப்பதை காண முடிகின்றது. இருவருக்கும் இடையில் இருக்கும் இணக்கத்தை இதில் அதிகமாக காண முடிகின்றது. இந்த வீடியோவிற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 'இப்படி ஒரு நாய் எனக்கும் வேண்டும்' என ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். 'என்ன ஒரு அறிவு' என மற்றொரு பயனர் அதன் ஆற்றலை பாராட்டியுள்ளார்.


பொதுவாகவே இணையவாசிகள் விலங்குகளின் வீடியோக்களை அதிகம் விரும்பி பார்க்கிறார்கள். அதுவும் குரங்கு, பாம்பு, நாய், பூனை போன்ற விலங்குகளுக்கு இணையத்தில் அதிக மவுசு உள்ளது. நாய் மிகவும் நன்றியுள்ள விலங்கு. அதுமட்டுமல்ல, அது மிகவும் புத்திசாலியான விலங்காகவும் உள்ளது. நாம் ஆச்சரியப்படும் பல விஷயங்களை செய்து நாய்கள் நம்மை அசத்துவது உண்டு. நாய்கள் வளர்க்கப்படும் வீடுகளில் அவை வீட்டின் ஒரு அங்கமாகவே பார்க்கப்படுகின்றன. நாய்களும் தங்கள் முதலாளிகள் மீதும், வளர்க்கப்படும் வீட்டு உறுப்பினர்கள் மீதும் அளவுகடந்த பாசத்தை காட்டுகின்றன.


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | டெல்லி தீபாவளி பார்ட்டியில் அமெரிக்க தூதரின் குத்தாட்டம் ! சைய சையா வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ