திருமணத்தை தெறிக்கவிட்ட மணமகளின் ஆட்டம்.... சான்சே இல்ல: சொக்கிய நெட்டிசன்கள், வீடியோ வைரல்

Viral Video: சமீபத்தில், பாகிஸ்தானிய மணப்பெண்ணின் நடன வீடியோ இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. வீடியோவில் மணமகளின் மகிழ்ச்சியையும் மணமகன் மீது இருக்கும் காதலையும் கண்கூடாகக் காண முடிகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 13, 2023, 07:42 AM IST
  • இந்த அழகான வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் @moizsiddiquephotography என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு 600,000 -க்கும் மேற்பட்ட லைக்குகளும் ஏகப்பட்ட வியூஸ்களும் கிடைத்துள்ளன.
  • இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
திருமணத்தை தெறிக்கவிட்ட மணமகளின் ஆட்டம்.... சான்சே இல்ல: சொக்கிய நெட்டிசன்கள், வீடியோ வைரல் title=

Viral Video: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. திருமண வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு தனி ரசசிகர் பட்டாளமே உள்ளது.

திருமணங்களின் பல வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றப்படுகின்றன. ஆனால் இவற்றில் சில திருமண வீடியோக்கள் (Wedding Viral Video) மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்று விடுகின்றன. இவை உடனே பலரால் பகிரப்பட்டு வைரலும் ஆகின்றன. திருமண வீடியோக்களில் நாம் பல வித காட்சிகளை காண்கிறோம். திருமணம் என்றாலே மகிழ்ச்சி, கோலாகலம் தான். இது மணமக்களின் வாழ்வில் மிக முக்கியமான தருணமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இரு குடும்பங்களின் சங்கமமாகவும் உள்ளது. பல உறவுகளும் நட்புகளும் சேர்ந்து மகிழ்ந்து அனுபவிக்கும் கோலாகலமான கொண்டாட்டமாக இது இருக்கின்றது. சில சமயம் திருமண ஜோடிகள் அழகாக நடனமாடுவதையும், சில சமயம் காதல் வசனங்கள் பேசுவதையும், சில சமயம் முத்தங்களை பரிமாறிக்கொள்வதையும் நாம் பார்த்துள்ளோம். 

திருமணக் கொண்டாட்டங்களின் உலகில், நடன நிகழ்ச்சிகளுக்கு தனி இடம் உள்ளது. விருந்தினர்கள் மட்டுமல்லாமல் தற்போது மணமகனும் மணமகளும் கூட அழகாக தங்கள் விசேஷ நாளில் மகிழ்ச்சியாக நடனமாடுவதை காண முடிகின்றது. அப்படி ஒரு வீடியோ சமீபத்தில் வைரல் ஆகியுள்ளது. இதில் ஒரு மணமகள் தனது மணமகனுக்காக அற்புதமாக நடனமாடுவதை காண முடிகின்றது. 

சமீபத்தில், பாகிஸ்தானிய மணப்பெண்ணின் நடன வீடியோ இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. வீடியோவில் மணமகளின் மகிழ்ச்சியையும் மணமகன் மீது இருக்கும் காதலையும் கண்கூடாகக் காண முடிகின்றது. 

அசத்தலாக நடமகாடிய மணப்பெண்

இந்த வைரலான வீடியோவில், ஸ்ரேயா கோஷலின் "குலி மாதா" பாடலின் மெல்லிசை ட்யூனுக்கு ஒரு பாகிஸ்தான் மணமகள் நடனமாடுவதை காண முடிகின்றது. மணமகள் சிவப்பு நிறத்தில் ஒரு அழகான லெஹங்காவில் அலங்கரிக்கப்பட்ட மெழுகு பொம்ம்மை போல தோன்றுகிறார். புன்னகையோடும், பல வித முக பாவங்காளோடும் அவர் ஆடும் நடனம் காண்பவர்களை மயக்கும் வண்னம் உள்ளது. திருமணத்திற்கு வந்துள்ள உறவினர்கள் மற்றும் விருந்தினர் அனைவரும் மகிழ்ச்சியோடு அவரது நடனத்தை காண்பதை வீடியோவில் பார்க்க முடிகின்றது.

மேலும் படிக்க | டெல்லி தீபாவளி பார்ட்டியில் அமெரிக்க தூதரின் குத்தாட்டம் ! சைய சையா வீடியோ வைரல்

அழகாக நடாமாடி இணையத்தை கலக்கிய மணமகளின் வீடியோவை இங்கே காணலாம்:

இந்த அழகான வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் @moizsiddiquephotography என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு 600,000 -க்கும் மேற்பட்ட லைக்குகளும் ஏகப்பட்ட வியூஸ்களும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் (Netizens) இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

மணமகள் மிக எளிய நடன அசைவுகளியயே வெளிக்காட்டினாலும், அவரது முகத்தில் தெரியும் அப்பட்டமான மகிழ்ச்சியும், அவர் காட்டும் முக பாவங்களும் அனைவரையும் மீண்டும் மீண்டும் 'ரீப்ளே' பட்டனை அழுத்த வைக்கிறது. இந்த வீடியோவின் அழகு எல்லைகளை தாண்டி புகழ்பெற்று வருகிறது. பாகிஸ்தான் திருமண வீடியோவான இந்த வீடியோ (Viral Vidoe), இந்தியாவிலும் பட்டையை கிளப்பி வருகின்றது.   

"மணமகள் நம்பமுடியாத அளவிற்கு அழகாக இருக்கிறார். மிகவும் அழகாக நடனமாடுகிறார்" என்று தனது பாராட்டை அடக்க முடியாத ஒரு நபர் கூறியுள்ளார். மற்றொரு பயனர், "எனது திருமணத்தில் எனது மணப்பென்ணும் எனக்காக இப்படி ஆடினால் நன்றாக இருக்கும்" என்று கூறி, தனது சொந்த பெருநாளுக்கான விருப்பத்தை வெளிப்படுத்தினார். "எனக்கு எப்போது திருமணம் நடந்தாலும் சரி அல்லது இந்த பாடல் எவ்வளவு பழைய பாடல் ஆனாலும் சரி, நான் நிச்சயமாக இந்த பாடலுக்கு நடனமாடுவேன்" என்று மற்றொரு பயனர் சபதம் செய்துள்ளார். 

மேலும் படிக்க | சூயிங்கம் மெல்லும் பழக்கம் இருக்கா... ‘இந்த’ வீடியோவை பார்த்தா இனி தொட மாட்டீங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News