Bizarre! திருமணத்தில் கலந்துக் கொள்ளாதவர்களுக்கு புதுமணத் தம்பதிகள் பில் அனுப்பிய வினோதம்!
திருமணம் என்பது வாழ்வில் மறக்க முடியாத தருணம். அதை சிறப்பாக கொண்டாடவே அனைவரும் விரும்புகின்றனர். சொல்லப்போனால், குழந்தை பிறந்ததில் இருந்தே அவர்களின் கல்யாணக் கனவுகளை பெற்றோர் காணத் தொடங்கி விடுகின்றனர். அந்த திருமணத்திற்காக சேமிக்கவும் தொடங்கிவிடுகின்றனர்.
திருமணம் என்பது வாழ்வில் மறக்க முடியாத தருணம். அதை சிறப்பாக கொண்டாடவே அனைவரும் விரும்புகின்றனர். சொல்லப்போனால், குழந்தை பிறந்ததில் இருந்தே அவர்களின் கல்யாணக் கனவுகளை பெற்றோர் காணத் தொடங்கி விடுகின்றனர். அந்த திருமணத்திற்காக சேமிக்கவும் தொடங்கிவிடுகின்றனர்.
ஆனால் நாம் நினைத்த அளவு விருந்திருனர்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியுமா? முடியாதே! இந்த புதுமணத் தம்பதிகள், தங்களது கல்யாணத்துக்கு வராத விருந்தினர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த திருமண விருந்துக்கான செலவை ஈடுசெய்ய ஒரு தனித்துவமான வழியை கண்டுபிடித்தனர்.
பொதுவாக திருமணச் செலவில் உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். அதிலும், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காலத்தில் திருமண ஏற்பாடுகளுக்கு நிறைய செலவாகும். முழு திருமணத்தையும் ஏற்பாடு செய்ய சிலர் தங்கள் வாழ்நாள் சேமிப்பையே கரைத்து விடுகின்றனர்.
ALSO READ | டொமினோவின் nuts and bolts பீட்சா சாப்பிட்டதுண்டா? சாப்பிட்டவரின் எதிர்வினை இது
அத்தகைய ஒரு சூழ்நிலையில், பத்திரிக்கை கொடுத்தும் ஆஜராகாத விருந்தினர்களுக்கு நூதனமான முறையில் அதை அறிவுத்த விரும்பியது இந்த புதுமண ஜோடி.
திருமணத்தில் கலந்துக் கொள்ளாதவர்களுக்கு ஒரு பில்லை அனுப்பினார்கள். அதில், வராதவர்களுக்கு $ 240 (17,700 ரூபாய்) தொகையை செலுத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது. அந்த பில்லுக்கு 'No call, no show guest' என்று பெயரிடப்பட்டது.
ட்விட்டரில் பிலிப் லூயிஸால் பகிரப்பட்ட இந்த விலைப்பட்டியலை, "நான் இதற்கு முன்பு திருமண வரவேற்பு விலைப்பட்டியலைப் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன்" என எழுதியுள்ளார்.
ஜமைக்காவின் நெக்ரில் ரிசார்ட்டில் உள்ள ராயல்டன் நெக்ரில் (Royalton Negril) நடந்த திருமணம் இது திருமண வரவேற்பு விருந்தில் ஒருவருக்கு $ 120 செலவு என்று குறிப்பிட்டுள்ளது. இரண்டு விருந்தினர்கள் வராததால், மொத்த செலவு $ 240 ஆகும். ஆகஸ்ட் 18 தேதியிட்ட இந்த பில்லில், தொகையை செலுத்த ஒரு மாத காலக்கெடு கொடுக்கப்பட்டிருந்தது.
"இறுதியாக விருந்தினர்களின் எண்ணிக்கையை முடிவு செய்யும்போது திருமண வரவேற்பில் நீங்கள் இருக்கை (களை) உறுதிப்படுத்தியதால் இந்த விலைப்பட்டியல் உங்களுக்கு அனுப்பப்படுகிறது. மேலே உள்ள தொகை உங்கள் தனிப்பட்ட இருக்கைகளின் விலை. நீங்கள் வரவில்லை என்று எங்களுக்கு சரியான அறிவிப்பு கொடுக்கவில்லை என்பதால், உங்கள் இருக்கைகளுக்கான தொகையை முன்கூட்டியே செலுத்திவிட்டோம். நீங்கள் Zelle அல்லது PayPal வழியாக பணம் செலுத்தலாம். தயவுசெய்து எங்களை அணுகவும், உங்களுக்கு எந்த கட்டண முறை வேலை செய்கிறது என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்தவும். நன்றி!" என்று நூதனமாக பில்லை அனுப்பியிருக்கின்றனர் புதுமணத் தம்பதிகள்.
Also Read | இன்ஸ்டாகிராமில் ஜோதிகா என்ட்ரி: முதல் போஸ்ட்டே அட்டகாசம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR