நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பழங்கள் மற்றும் காய்கறிகளின் புதிய வகைகளை பயிர் செய்து வருவது அனைவரும் அறிந்ததே. உலகெங்கிலும் உள்ள மக்களை ஈர்க்கும் பழங்கள், விலையிலும் அதிகமாகவே இருக்கிறது. ஆனால் இந்த பழத்தின் விலையைக் கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சி எற்படலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சில பழங்கள் மற்றும் காய்கறிகள் பலருக்கு ஆடம்பரமான பொருளாக இருக்கின்றன. ஆனால் பணக்காரர்களே வாங்கத் தயங்கும் உலகின் மிக விலையுயர்ந்த பழத்தின் விலை எவ்வளவு தெரியுமா?  


உலகிலேயே விலை உயர்ந்த இந்தப் பழத்தின் விலை 50 பவுன் தங்கத்தின் விலையை விட அதிகம்! முலாம்பழத்தின் இந்த ரகம் ஜப்பானில் விளைபவை.


உலகின் மிக விலையுயர்ந்த பழத்தின் பெயர் யுபரி முலாம்பழம் (Yubari melon), இந்த பழத்தை வாங்கும் விலைக்கு ஒருவர் அரைக்கிலோ தங்கம் அல்லது நிலத்தை கூட வாங்கலாம். இந்த அளவு விலையுயர்ந்த பழம் ஜப்பானில் விற்கப்படுகிறது. எவ்வளவு பணம் கொடுத்தாலும் அனைவருக்கும் கிடைக்காத பழம் இது. யுபரி முலாம்பழத்தின் விலை பல லட்சங்கள் தெரியுமா?


Also Read | இது ஞானப்பழம் அல்ல Immunity அதிகரிக்கும் ஆரோக்கிய பழம்...


ஒரு கிலோ யுபரி முலாம்பழத்தின் விலை தோராயமாக ரூ.20 லட்சம் வரை இருக்குமாம்!   ஜப்பானில் விற்கப்படும் இந்தப் பழம், சமூகத்தின் உயர் மட்டத்தில் இருப்பவர்களால் மட்டுமே வாங்க முடிந்த யுபரி முலாம்பழம், விற்பனையாளர்கள் மற்றும் உணவகங்களில் விற்பனைக்கு கிடைக்காது.


ஒரு கிலோ, 20 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டாலும், பணக்காரர்கள் மத்தியில், இதற்கு அதிக தேவை உள்ளது. ஜப்பானின் யுபாரி பகுதியில் பிரத்தியேகமாக வளர்க்கப்படுகிறது.


இந்த பழம், கிரீன்ஹவுஸில் சூரிய ஒளியில் வளர்க்கப்படுகிறது. இந்த முலாம்பழங்கள் மிகவும் விலை உயர்ந்ததாக இருப்பதற்கான காரணம், இந்த பழத்திற்கு புவியியல் சார்ந்த குறியீடு (Geographical indication, GI)  இருப்பது தான்.


உலகிலேயே விலை உயர்ந்த இந்தப் பழத்தின் விலை 50 பவுன் தங்கத்தின் விலையை விட அதிகம்! முலாம்பழத்தின் இந்த ரகம் ஜப்பானில் விளைகிறது.


Also Read | ஹிஜாப் அணியாத பெண்கள் 'நறுக்கிய முலாம்பழம்'


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR