வாஷிங்டன்: பாம்பென்றால் படையும் நடுங்கும்!! ஆனால், பாம்புகளின் மீது அனைவருக்கும் அளவுக்கடங்காத ஆர்வமும் இருப்பது வழக்கம். பாம்புகள் எப்போதும் மனித கற்பனைக்கு ஒரு விசித்திரமாகவே இருந்துள்ளன.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவின் (America) புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர் பில் ஹாஸ்ட் தனது அற்புதமான சிலிர்ப்பூட்டும் செயல்களுக்காக உலகம் முழுவதும் பிரபலமானவர். ஒரு விசேஷ பணிக்காக ஆராய்ச்சியாளராக இருந்த பில் ஹாஸ்ட் பாம்பு பிடிக்கும் நபராக மாறினார்.


அவரை 172 முறை பாம்புகள் கடித்துள்ளதாக கூறப்படுகிறது. இவற்றில் 20 முறை அவர் மிக மோசமாக பாதிக்கப்பட்டார். எனினும் அனைத்து முறையும் அவர் உயிர் பிழைத்தார்.


இந்த இனங்களின் பாம்புகளைப் பிடித்துள்ளார்


வாஷிங்டன் போஸ்ட்டில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, பில் ஹாஸ்டிடம் ஒரு சமயத்தில் பத்தாயிரம் பாம்புகள் இருந்தன. அவர்களிடம் கடல் பாம்புகள், புலிப் பாம்புகள், நாகப்பாம்புகள், கட்டுவீரியன் வகைகள் மற்றும் வைப்பர் பாம்புகள் ஆகியவை அதிகமாக இருந்தன. அவர் எந்த கையுறையும் அணியாமல் வெறும் கையால் பாம்பைப் பிடித்து வந்தார். அவர் பாம்புகளின் வாயை அழுத்தி விஷத்தை (Poison) எடுப்பதில் வல்லவர். இதை அவர் மருத்துவ ஆராய்ச்சிக்கு பயன்படுத்தினார்.



ALSO READ: Viral Video: நடுங்க வைக்கும் வீடியோ; இதயம் பலவீனமானவர்கள் பார்க்காதீர்கள்!


முதல் முறையாக எப்போது பாம்பு கடித்தது?


பில் ஹாஸ்டுக்கு வெறும் 12 வயதாக இருந்தபோது, ​​முதன்முறையாக அவரை பாம்பு கடித்தது. அவரை முதலில் டயமண்ட்பேக் ராட்லர் பாம்பு கடித்தது. குழந்தை பருவத்திலிருந்தே, அவருக்கு பாம்புகள் மீது ஆர்வம் இருந்தது. அவரை சிறு வயதில் முதன் முறையாக பாம்பு கடித்தபோது அவர் அமெரிக்காவின் புளோரிடாவில் வசித்து வந்தார்.


பில் ஹாஸ்ட் தனது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க மித்ரிடாடிசம் (Mithridatism ) நுட்பத்தைப் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், நபருக்கு குறிப்பிட்ட அளவு விஷம் அவ்வப்போது கொடுக்கப்படுகிறது. ஆனால், இதன் காரணமாக அந்த நபர் இறப்பதில்லை, மாறாக, பாம்பு விஷத்திற்கு எதிராக அவரது உடலில் ஆன்டிபாடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.


குறிப்பிடத்தக்க வகையில், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு, ஜூன் 15, 2021 அன்று, பில் ஹாஸ்ட் தனது 100 வயதில் காலமானார். அவரது மரணம் இயற்கையான காரணங்களால் ஏற்பட்டது. ஆனால் இன்றும் அவர் பாம்புகள் (Snakes) பற்றிய ஆராய்ச்சிக்காக நினைவுகூரப்படுகிறார்.


ALSO READ: Snake Poison as Covid Drug: பாம்பின் நஞ்சு, கோவிட் தொற்றுநோய்க்கு சிறந்த மருந்தாகலாம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR