முத்தம் கொடுத்தது ஒரு குத்தமா... மணமகனை அடித்து துவைத்த மணப்பெண் வீட்டார்..!!
உத்திர பிரதேச மாநிலம் ஹாபூரில், திருமண விழா அடிதடியில் முடிந்த கதை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு மணமகனின் ஒரு செயல் தான் காரணம். அப்படி என்ன தப்பு என கேட்கிறீர்களா...!
உத்திர பிரதேச மாநிலம் ஹாபூரில், திருமண விழா அடிதடியில் முடிந்த கதை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு மணமகனின் ஒரு செயல் தான் காரணம். அப்படி என்ன தப்பு என கேட்கிறீர்களா... அவர் மிக பெரிய தவறு ஒன்றை செய்துவிட்டார்.... வேறொன்றுமில்லை மணமகளுக்கு முத்தம் கொடுத்து விட்டார். இதற்காக மணமகள் தரப்பிலிருந்து வந்தவர்கள் மாப்பிள்ளையை அடிதத்தோடு மட்டுமின்றி திருமணத்திற்கு வந்திருந்த மணமகன் தரப்பினரையும் அடித்து உதைத்தனர்.
உத்திர பிரதேசத்தின் (Uttar Pradesh) ஹாபூர் டெஹாட் பகுதியில் உள்ள அசோக்நகரில் திருமண விழா நடந்து கொண்டிருந்தபோது, மாலை மாற்றிக் கொள்ளும் சடங்கின் போது, மணமகன் மணமகளை மேடையில் அனைவரும் முன்னிலையில் முத்தமிட்டார். மணமகனின் இந்த செயல் மணமகள் தரப்பு மக்களை ஆத்திரமடைய செய்தது. மணமகன் உட்பட திருமணத்திற்கு வந்தவர்களை அடிக்க ஆரம்பித்தனர்.
சிறிது நேரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை மூண்டது. இதனால் ஆத்திரமடைந்த மணமகன் தரப்பும் மணமகள் தரப்பையும் தாக்கியுள்ளனர். அடிதடி நிலைமைக்கு சென்று விட்டது கட்டைகள், கம்பிகள் மற்றும் கம்புகளால் தாக்கினர். கற்களை வீசியும் தாக்கினர். மணமகன் தரப்பினர் மறுபுறம் மணமகள் தரப்பினர் மீது கற்களை வீசத் தொடங்கினர். இதனால், இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் திருமண ஊர்வலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க | வேற்றுகிரகவாசிகள் விஸிட் அடித்தார்களா என்ன... வானில் முளைத்த பிரகாசமான தூண்கள்...!
திருமண விழாவில் நடந்த மோதம் விவகாரம் காவல்துறைக்கு சென்றது. சண்டை குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், காயமடைந்த அனைவரையும் உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர். அதோடு இரு தரப்பிலும் 7 பேர் கைது செய்யபட்டனர். அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் 151வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் அப்பகுதியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இச்சம்பவம் குறித்து மணமகளின் தந்தை கூறுகையில், தனது இரு மகள்களுக்கும் ஒரு சேர திங்கள்கிழமை இரவு திருமணம் நடைபெற்றதாக தெரிவித்தார். மூத்த மகளின் ஊரான குலாவதியின் சுபாஷ்நகர் மற்றும் இளைய மகளின் பகுதியான ஷிவ்நகரில் இருந்து மாப்பிள்ளை ஊர்வலம் வந்துள்ளது. மூத்த மகளின் திருமணம் சுபாஷ் நகரில் வசிக்கும் இளைஞருடன் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், இளைய மகளின் திருமணத்தில் மாலை மாற்றிக் கொள்ளும் சடங்கின் போது குழப்பம் ஏற்பட்டது. மணமகன் மகளுக்கு முத்தம் கொடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆனால், சமரசம் செய்யப்பட்டு பின்னர் திருமணம் நடந்துள்ளது.
மேலும் படிக்க | கொதிக்கும் பாலைவன மணலில் அப்பளம் சுடும் ராணுவ வீரர்... வைரலாகும் வீடியோ..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ