அடிச்சது ஜாக்பாட்... வங்கி கணக்கில் தவறுதலாக ரூ.9,900 கோடி வரவு...!

உத்தரப்பிரதேச மாநிலம் பதோஹி மாவட்டத்தைச் சேர்ந்த பானு பிரகாஷ் என்பவர் தனது கணக்கில் ரூ.9,900 கோடி வரவு வைக்கப்பட்டதைக் கண்டு ஆச்சரியமடைந்தார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 20, 2024, 05:30 PM IST
  • கணக்கில் ₹99,99,94,95,999.99 வரவு வைக்கப்பட்டதைக் கண்டு ஆச்சரியமடைந்த நபர்.
  • மென்பொருளில் ஏற்பட்ட பிழையா காரணமாக கணக்கில் வந்த பணம்.
  • கணக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முடக்கப்பட்டது.
அடிச்சது ஜாக்பாட்... வங்கி கணக்கில் தவறுதலாக ரூ.9,900 கோடி வரவு...! title=

காலையில் எழுந்ததும், திடீரென மொபைலில் மெசேஜ் பார்க்கும் போது, உங்களுக்கு கிடைத்திருப்பது லட்சங்கள் அல்ல கோடிக்கணக்கான ரூபாய் என்று தெரிய வந்தால் எப்படி இருக்கும்... அதே சமயம் சிறிது நேரம் கழித்து இது ஒரு வகையான தொழில்நுட்ப கோளாறு அல்லது வங்கி அனுப்பும் எச்சரிக்கை என்று இருந்தால் மனதில் தோன்றிய உற்சாகம் பட்டென புஸ்வானமாகி போய் விடும்.

உத்திரபிரதேசம் பதோஹியில் வசிக்கும் பானு பிரகாஷுக்கும் இதே போன்ற சம்பவம் நடந்தது. பானுவின் கணக்கில் ரூ.9,900 கோடி வரவு வைக்கப்பட்டிருப்பது அவருக்கு தெரிய வந்தது. இதையடுத்து வங்கி நிர்வாகத்திடம் புகார் அளித்த நிலையில், மென்பொருள் கோளாறால் இவ்வாறு நடந்தது என தெரியவந்தது.

பானு பிரகாஷ் தனது வங்கிக் கணக்கில் ரூ.99,99,94,95,999.99 இருப்பதைப் பார்த்த போது தன் கண்களை நம்பமுடியவில்லை. அசல் கிசான் கிரெடிட் கார்டு (கேசிசி) கடன் கணக்கு, தற்செயலாக  கணக்காக (என்பிஏ) மாறிய பிறகு, உத்திர பிரதேசத்தில் (Uttar Pradesh) உள்ள குறிப்பிட்ட வங்கி மென்பொருளில் ஏற்பட்ட பிழை காரணமாக இது நடந்தது என்பது பின்னர் தெரியவந்தது, இது கணக்கில் தவறான தொகை தோன்றுவதற்கு காரணமானது.

வங்கியின் கிளை மேலாளர் ரோஹித் கெளதம் கூறியதை மேற்கோள்காட்டி செய்தி ஊடக அறிக்கைகள், ஒரு மென்பொருள் கோளாறால் அந்த நபரின் கணக்கில் பெரும் தொகை டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், சிக்கலைத் தீர்க்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும் படிக்க | அதிக லாபம் கொடுக்கும் முதலீடு எது? தங்கம்... வெள்ளி... பங்குச்சந்தை? விரிவான அலசல்...

கணக்கு வைத்திருப்பவரிடம் நடந்ததைச் சொன்ன பிறகு, தவறு சரி செய்யப்படும் வரை, கணக்கில் உள்ள தொகை தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்கும் வரை அவரது கணக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முடக்கப்பட்டதாக அதிகாரி கூறினார்.

கடந்த 2023ம் ஆண்டு சென்னையில் வசிக்கும் ஒருவரின் கணக்கில் ரூ.753 கோடி (753,48,35,179.48) வரவு வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அவரது நண்பர் அவருக்கு ரூ.2000 மட்டுமே அனுப்பியிருந்தார். வங்கி மென்பொருளில் ஏற்பட்ட கோளாறால் இந்த தவறு நடந்ததாக கூறப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் உத்திர பிரதேசத்தில், இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது. வங்கி மென்பொருளில் ஏற்பட்ட பிழை காரணமாக, எதிர்பாராத விதமாக வாடிக்கையாளரின் கணக்கில் பெரும் தொகை வரவு வைக்கப்பட்டது.

மேலும் படிக்க | மாதம் இரண்டரை லட்சம் ஓய்வூதியம் பெற சூப்பர் ஐடியா! புத்திசாலித்தனமான முதலீடு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News