டெல்லி பள்ளியில் இந்திய வரவேற்பு குறித்து நன்றியைத் தெரிவித்த அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் வியாழக்கிழமை "பாரம்பரிய" வரவேற்புக்காக அதிகாரிகளைப் பாராட்டினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து அமெரிக்க முதல் பெண்மணி தனது கணவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது கலந்து கொண்ட "மகிழ்ச்சி வகுப்பு" அமர்வின் படங்களை பகிர்ந்துள்ளார். அவர் புகைப்படங்களுக்கு "அழகான திலக் & ஆர்த்தி பாரம்பரியத்துடன் என்னை வரவேற்றதற்கு சர்வோதயா பள்ளிக்கு நன்றி!" என தலைப்பிட்டுள்ளார்.


முன்னதாக கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி, டெல்லியின் நானக்புராவில் உள்ள சர்வோதயா கோ-எட் சீனியர் செகண்டரி பள்ளிக்கு மெலனியா டிரம்ப் சென்று "மகிழ்ச்சி வகுப்பில்" பங்கேற்றார். தெற்கு மோதி பாக் பள்ளியில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் உரையாடிய மெலனியா டிரம்ப் அவர்களுடன் சுமார் ஒரு மணி நேரம் செலவிட்டார்.



அவரது வருகைக்காக, பள்ளி அனைத்தும் மலர் மாலைகள் மற்றும் உருவங்களுடன் அலங்கரிக்கப்பட்டன. பள்ளி மாணவர்கள் அவரை இந்திய மற்றும் அமெரிக்கக் கொடிகளை அசைத்து வரவேற்றனர். இந்த தருணங்களை தற்போது மீண்டும் நினைவுகூற்ந்துள்ள அமெரிக்க முதல் பெண்மணி, தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக இந்திய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.



முன்னதாக 2018-ஆம் ஆண்டில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு I-VIII வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சி வகுப்புகளை அறிமுகம் செய்தது. எவ்வாறாயினும், டெல்லி முதல்வர் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோரின் பெயர்களை அழைப்பாளர்களின் பட்டியலில் இருந்து அதிகாரிகள் கைவிட்டனர், இது பலவிதமான விமர்சகர்களை தூண்டியது.


திருமதி டிரம்ப்பின் வருகைக்கு முன்னதாக, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், "அமெரிக்க முதல் பெண்மணி இன்று எங்கள் பள்ளியில் மகிழ்ச்சி வகுப்பில் கலந்துகொள்வார். எங்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் டெல்லிவாசிகளுக்கு ஒரு சிறந்த நாள். பல நூற்றாண்டுகளாக, இந்தியா உலகிற்கு ஆன்மீகத்தை கற்பித்திருக்கிறது. எங்கள் பள்ளியிலிருந்து மகிழ்ச்சியின் செய்தி" என குறிப்பிட்டு இருந்தார்.



டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் பிப்ரவரி 24-25 வரை 36 மணி நேர இந்தியா பயணத்தில் இருந்தனர். தனது வருகையின் போது, ​​ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வணிக தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தினார் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் காஷ்மீர் போன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.