அதிகாலையில் தோகை விரித்தாடும் மயிலின் அழகிய வீடியோ
காவலாளிகள் போல் மரங்கள் நிற்கும் இயற்கை எழில் மிகு காட்சியின் நடுவே மயில் தோகை விரித்தாடும் வீடியோவை காண்போரை கண்களுக்கு விருந்தளிக்கிறது.
மயில்கள் தோகை விரித்தாடும் வீடியோவை நீங்கள் இதற்கு முன்பும் பார்த்திருக்கக்கூடும். ஆனால், அந்த வீடியோக்களைவிட சிறந்த வீடியோ இது என்று கூறலாம். இயற்கை எழில் மிகு மரங்கள் சூழந்த இடத்தில், மயில்கள் ஆனந்த தாண்டவம் ஆடும்போது சரியான நேரத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. மரங்கள் இருபுறமும் காவலாளிகள்போல் சூழந்திருக்கின்றன. வரிசையாக நின்று கொண்டிருக்கும் மரங்களுக்கு இடையே உலாவும் மயில் ஒன்று திடீரென தோகை விரித்தாடுகிறது.
மேலும் படிக்க | சிறப்புத் திறன் கொண்ட நாய்களின் சிறப்பான செயல்கள்! வைரல் வீடியோ
அந்த நேரத்தில் அருகில் இருக்கும் மயில் ஒன்று அதனை வியந்து பார்க்கிறது. மான் ஒன்று தோகை விரித்தாடும் மயிலுக்கு சற்று தொலைவில் மான் ஒன்று சென்று கொண்டிருக்கிறது. இது காண்போரின் கண்களுக்கு இரட்டை விருந்தாக உள்ளது. டிவிட்டரில் மட்டும் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ள இந்த வீடியோவை இணைய வாசிகள் இன்னும் கவர்ந்து வருகிறது.
இந்த வீடியோவை சஞ்சய் குமார் என்பவர் பகிர்ந்துள்ளார். பொதுவாக மயில்கள் கோடை காலத்தில் இனப்பெருக்கம் அதிகம் செய்யுமாம். அதற்காக பெண் மயில்களை கவருவதற்காக இத்தகைய நடனங்களை ஆடும் எனத் தெரிவித்துள்ளார். மயில்கள் தோகை விரித்தாடும் கண்கொள்ளாக் காட்சியை மெல்லிய பாடல் ஒன்று பின்னணியில் இசைத்து, பார்க்கும்போது கிடைக்கும் பரவசம் தனி சுகம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வீடியோவை அவர் வெகுவாக ரசித்துள்ளார்.
மேலும் படிக்க | காட்டு ராஜாவுக்கு கிளாஸ் எடுத்த எருமைகள், பல்பு வாங்கிய சிங்கங்கள்: வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR