காட்டு ராஜாவுக்கு கிளாஸ் எடுத்த எருமைகள், பல்பு வாங்கிய சிங்கங்கள்: வைரல் வீடியோ

Wild Animal Video: இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. எருமைகளின் ஒற்றுமையை இணையவாசிகள் பாராட்டி வருகிறார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 21, 2022, 05:21 PM IST
  • சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.
  • சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
காட்டு ராஜாவுக்கு கிளாஸ் எடுத்த எருமைகள், பல்பு வாங்கிய சிங்கங்கள்: வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

காட்டு விலங்குகளின் திகிலை கிளப்பும் இதயத்தை உலுக்கும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தினமும் வெளியிடப்படுகின்றன. சமூக ஊடக பயனர்கள் இதுபோன்ற வீடியோக்களை மிகவும் விரும்பி பார்க்கிறார்கள். இந்நாட்களில் மக்கள் தங்கள் பெரும்பாலான நேரத்தை சமூக ஊடகங்களில் செலவிடுவதைக் காண முடிகிறது. இதுபோன்ற சமயங்களில் வித்தியாசமான பல வீடியோக்கள் பகிரப்படுகின்றன. 

சமீபத்தில், காட்டு விலங்குகளின் மனதை இளக வைக்கும் இப்படிப்பட்ட ஒரு வீடியோ வெளிவந்தது. இது மக்களிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது. பொதுவாக சிங்கத்தை காட்டின் ராஜா என்று அழைப்பார்கள். காட்டுக்குள், மிகப்பெரிய மிருகங்களும் சிங்கத்தை எதிர்கொண்டால், அதனுடன் மோதாமல் விலகிச்செல்லவே நினைக்கும். ஆனால், இந்த வீடியோவில் சிங்கத்துக்கே ஆப்பு வக்கப்பட்டதை காண முடிகின்றது.

வைரலாகி வரும் இந்த கிளிப்பில், சிங்கங்களின் கூட்டம் எருமைகளை வேட்டையாடுவதைக் காண முடிகிறது. சிங்கங்களின் கூட்டம் ஒரு எருமையை தரையில் வீழ்த்தி, அதன் மீது பாய்கின்றன. அந்த எருமையின் நிலை என்ன ஆகும் என மனம் பதபதைக்கும் நேரம், யாரும் எதிர்பாராத ஒரு விஷயம் நடக்கிறது.

மேலும் படிக்க | Viral video: நாகப்பாம்பை ஆக்கிரோஷமாக தாக்கும் கீரி

சிங்கங்கள் பல்பு வாங்கிய அந்த வீடியோவை இங்கே காணலாம்:

சிங்கங்களிடம் மாட்டிக்கொண்ட எருமையை காப்பாற்ற, எருமையின் நண்பர்களின் கூட்டம் சிங்களை பின்னாலிருந்து வந்து தாக்குதல் நடத்துகின்றன. விசாலமான எருமைகளை பார்த்து சிங்கங்கள் எதிர்த்து கூட நிற்காமல் வாலை சுருட்டிக்கொண்டு ஓடி விடுகின்றன. 

சிங்கங்கள் தாக்கிய எருமையும் எழுந்து நின்றுகொள்கிறது. என் நண்பர் கூட்டம் அருகில் இருக்கும்போது எனக்கென்ன கவலை என்பதுபோன்ற உறுதி அதனிடம் காணப்படுகின்றது. 

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. எருமைகளின் ஒற்றுமையை இணையவாசிகள் பாராட்டி வருகிறார்கள். இந்த வீடியோவுக்கு ஏரளமான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.

மேலும் படிக்க | குடித்துவிட்டு குத்தாட்டம் போடும் குடிமகனின் வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News