Acrobatic Dance: வாடிகனிலும் குதூகல டான்ஸ்! ரசித்து பார்க்கும் போப் வீடியோ வைரல்
Acrobatic Dance At St Peters Square Vatican: போப்பாண்டவரை கைத்தட்டி ரசிக்க வைத்த நடனம்.... வாடிகனிலும் குதூகல டான்ஸ்! ரசித்து பார்க்கும் போப் வீடியோ வைரல்
வைரல் வீடியோ: சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. கைக்குள் மொபைலில் அடங்கிவிட்ட இணையம், நம்முடன் இணைந்தே பயணிக்கிறது. ஒருகாலத்தில் தனி உலகமாக கருதப்பட்ட இணையமும் தொழில்நுட்பமும் இன்று நம் கைக்குள் அடங்கிவிட்டன. பாரம்பரியமான நிகழ்ச்சியில் அல்லது மதச்சடங்கு தொடர்பான வீடியோக்களையும் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன. அப்படி ஒரு வீடியோ, கிறிஸ்துவர்களின் புனித நகரான வாடிகனில் போப்பாண்டவர் முன்னிலையில் நடைபெற்ற அக்ரோபாட்டிக் நடன நிகழ்ச்சி வைரலாகிறது.
கென்யாவைச் சேர்ந்த "தி பிளாக் ப்ளூஸ் பிரதர்ஸ்" என்ற ஒரு அக்ரோபாட்டிக் நடனக் குழு, செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் போப் பிரான்சிஸ் வாராந்திர பொது பார்வையாளர்களின் போது அவர்களுக்காக நடன நிகழ்ச்சியை நிகழ்த்தினார்கள். நைரோபியை சேர்ந்த "பிளாக் ப்ளூஸ் பிரதர்ஸ்" என்று அக்ரோபாட்டிக் கலைஞர்களின் குழு புதன்கிழமை செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் போப்பின் வாராந்திர பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியதும், போப் நடனத்தை கைத்தட்டி சிரித்து பார்த்து ரசித்ததும் வைரலாகிறது.
மேலும் படிக்க | 'தாத்தா இது தேவையா’: பெண்ணை பார்த்து முதியவர் செய்த செயல், ஷாக் ஆன நெட்டிசன்கள்
செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான விசுவாசிகள் வழக்கமான கேடசிசம் பாடம், பிரார்த்தனைகள் மற்றும் போப்பின் ஆசீர்வாதங்களை பெறுவதற்காக கூடியிருந்தனர். அவர்களுக்கு எதிர்பாராத விருந்தாக, நடன சர்க்கஸ் நிகழ்ச்சியையும் பார்த்து மகிழ்ந்தனர். இந்த நடன நிகழ்ச்சியை போப் பிரான்சிஸ் விரும்பிப் பார்த்தார்.
"சோல் மேன்" மற்றும் "டூ தி ட்விஸ்ட்" என்ற இசைக்கு இசைக்குழு ஆக்ரோபாடிக் நடனம் ஆடியது. தொப்பிகளுடன் கூடிய கருப்பு உடைகளை அணிந்து, அக்ரோபாட்கள், சம்மர்சால்ட்கள் மற்றும் காற்றில் ஹேண்ட் ஸ்டாண்டுகளை நிகழ்த்தி, அங்கு கூடியிருந்தவர்களை நடனக் குழுவினர் மகிழ்வித்தனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
பிளாக் ப்ளூஸ் பிரதர்ஸ் குழு, ஐந்து கென்ய அக்ரோபாட்கள் இணைந்து நடத்தும் ஒரு ஆகும், இந்தக் குழுவின் நிகழ்ச்சிகள் உலகெங்கிலும் உள்ள அரங்குகளிலும் திருவிழாக்களிலும் பல ஆண்டுகளாக அரங்கேற்றப்பட்டுள்ளன. மிகவும் பிரபலமான இந்த இசைக் குழு, மல்யுத்தம், மனித பிரமிடுகள், நெருப்புடன் கூடிய ஸ்டண்ட் மற்றும் உடலின் திறமை ஆகியவற்றுடன் பார்வையாளர்களை மகிழ்விக்கிறது இந்த வீடியோவை பலரும் விரும்பி பார்க்கின்றனர்.
கென்யாவைச் சேர்ந்த இந்த நிறுவனம், நைரோபியை தளமாகக் கொண்ட சரகாசி என்ற சமூக சர்க்கஸ் அறக்கட்டளையை சேர்ந்தவர்கள், கிழக்கு ஆப்பிரிக்காவில் பின்தங்கிய பின்னணியில் உள்ள இளைஞர்களுக்கு உதவுவதற்காக நிறுவப்பட்ட இந்த குழு தி பிளாக் ப்ளூஸ் பிரதர்ஸ் என்று புகழ் பெற்றது. இந்த அக்ரோபாட்டிக்ஸ் குழு, சுதந்திரம் மற்றும் குழுப்பணி ஆகிய இரண்டிற்கும் மிகவும் பெயர் பெற்றது.
மேலும் படிக்க | Lion Video: என்று தணியும் இந்த தீ? எரியும் காட்டில் சோக நடை போடும் சிங்கம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ