Fake Note: கறுப்பு காகிதம் 500 ரூபாய் நோட்டாக மாறும் மாயம்; பகீர் வீடியோ
கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விட்டவர்கள் கைது, கள்ள நோட்டுக்கள் பறிமுதல் என செய்திகளில் நாம் அடிக்கடி காண்கிறோம்.
கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விட்டவர்கள் கைது, கள்ள நோட்டுக்கள் பறிமுதல் என செய்திகளில் நாம் அடிக்கடி காண்கிறோம். எனவே மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றால் மிகையில்லை. கள்ள நோட்டு தயாரிப்பது தொடர்பான அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலாகி வருகிறது.
கருப்பு காகிதத்தை நொடியில் 500 ரூபாய் தாளாக மாற்ற முடியுமா.. முடியும் என்பதை இந்த வீடியோவில் காணலாம். அதைப் பார்த்தால் நிச்சயம் உங்களால் நம்ப முடியயாது. ஆனால், இது உண்மை சமப்வம் தான்.
இந்த வீடியோ UPSTF என்னும் உத்திர பிரதேச போலீஸின் சிறப்பு பணிக்குழுவின் அதிகார பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஒரு நபர் கள்ள நோட்டுக்களை தயாரிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. பகிரப்பட்ட வீடியோ 100% உண்மையான வீடியோ தான் என்பதை இதன் மூலம் அறியலாம்.
UPSTF டிவிட்டரில் பகிர்ந்த வீடியோவை இங்கே காணலாம்:
கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி கள்ள நோட்டு தயாரிக்கும் கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதாக இந்த வீடியோ மூலம் செய்தி தெரிவிக்கப்பட்டது. அதே கும்பலைச் சேர்ந்த ஒருவர் எப்படி கள்ள நோட்டை தயாரிக்கிறார் என்பது இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | Fake Rupee Notes: போலி 500 ரூபாய் நோட்டை கண்டறிவது எப்படி !
தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு தட்டில் நோட்டு போன்ற கருப்பு காகிதம் வைக்கப்பட்டு இருப்பதை வீடியோவில் காணலாம். அதன் பிறகு அந்த நபர் அதன் மீது பொடியை தூவி மெதுவாக சுழற்றி 500 நோட்டை எடுத்து காட்டுகிறார். இந்த கும்பலின் மோசடியை அம்பலப்படுத்த போலீசார் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர். நாம் விழிப்புடன் இருக்கவும், இதுபோன்ற போலி ரூபாய் நோட்டின் வலையில் சிக்காமல் இருக்கவும் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்தக் கும்பலிடம் இருந்து சுமார் 23,39,200 ரூபாய் போலி நோட்டுகள் மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான விமர்சனங்களை பெற்று வருகிறது. இவர்களை சுற்றி வளைத்து பிடித்த போலீஸ் குழுவிற்கு மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதே சமயம், இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிலர் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | Fact Check: காந்தி படம் அருகில் பச்சை நிற ஸ்ட்ரிப் இருக்கும் நோட்டு போலியானதா..!!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR