Viral Video: உயிரைப் பணயம் வைத்து ஓடும் ரயிலில் ஏற முயன்ற 71 வயது மூதாட்டி
வைரல் வீடியோ: பெண்ணின் முதுகு மற்றும் காலில் காயங்கள் ஏற்பட்டதாகவும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சிகிச்சை முடிந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினார் என மேற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வைரல் வீடியோ: மும்பையின் வசாய் சாலை ரயில் நிலையத்தில் 71 வயது பெண்மணி தவறி விழுந்து பிளாட்பாரத்துக்கும் ரயிலுக்கும் இடையே உள்ள இடைவெளியில் சிக்கிக்கொண்ட கொடூரமான ஒரு அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது. இருப்பினும், அவரது கணவர் மற்றும் அங்கிருந்த பிற பயணிகளின் உதவியால் அந்த மூதாட்டி ரயிலின் கீழ் சிக்காமல் காப்பாற்றப்பட்டார்.
தெலங்கானாவில் ஹைதராபாத்தில் வசிக்கும் அந்த பெண், பாவ்நகர்-காக்கிநாடா சிறப்பு ரயிலில் ஏற முயன்றபோது, கால் தவறி கீழே விழுந்து பிளாட்பாரம் இடைவெளியில் சிக்கிய சம்பவம் சனிக்கிழமை நடந்துள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சியில், அவரது கணவர் உட்பட இரண்டு பயணிகள் கீழே விழுந்த அந்த மூதாட்டியை விரைந்து சென்று பாதுகாப்பாக இழுத்து ரயிலில் சிக்கிக்கொள்ளாமல் காப்பாற்றுவதைக் காணலாம். சில நொடிகளுக்குப் பிறகு ரயில் நிறுத்தப்பட்டது.
அந்த பெண்ணின் முதுகு மற்றும் காலில் காயங்கள் ஏற்பட்டதாகவும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சிகிச்சை முடிந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினார் என மேற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எந்த ஒரு அசம்பாவிதத்தையும் தவிர்க்க, ஓடும் ரயிலில் ஏற முயற்சிப்பதைத் தவிர்க்குமாறு இந்திய ரயில்வே அதிகாரிகள் மீண்டும் மீண்டும் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ALSO READ | உயிர் விலைமதிப்பற்றது! இதுபோன்ற அபாய அட்டகாசம் வேண்டாம் -அதிர்ச்சி வீடியோ
தற்போது இந்த வீடியோ வைரலாகியுள்ளது. அந்த மூதாட்டியின் செயல்களை குறித்து பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். உயிரைப் பணயம் வைத்து ஓடும் ரயிலில் ஏற முயற்சித்தது தவறு என விமர்சித்துள்ளனர். வேறு சிலர் அவளைக் காப்பாற்றிய பயணிகளைப் பாராட்டினார்கள்.
ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு எச்சரிக்கையாக இந்த வீடியோவை உள்ளது. மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ரயிலில் நிற்கும் போது மட்டுமே இறங்க வேண்டும் அல்லது ஏற வேண்டும். ஓடும் ரயில் ஏற முயற்சிக்காதீர்கள். தயவுசெய்து ரயிலேவே விதிகளுக்கு கீழ்ப்படியுங்கள்.
அதேபோல அனேகள் மாவட்டத்தை சேர்ந்த அவஹள்ளி ரயிலேவே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற டிரக் மீது மைசூரு - மயிலாடுதுறை விரைவு ரயில் மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ரயில் மோதவுள்ளது என தெரிந்ததும் டிரக்கை ஓட்டி வந்த ஓட்டுநர் கீழு குதித்து தப்பியோடினார்.
சுமார் 1380 பயணிகளுடன் கார்மேலராம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு ஒசூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, தண்டவாளத்தைக் கடக்க முயன்ற டிரக் மீது ரயில் மோதியது.
ALSO READ | வேகமாக வந்த பஸ்ஸுக்கடியில் சிக்கிய இளைஞர், பதபதைக்க வைக்கும் Video
டிரக் காலியாக இருந்த நிலையில், ரயில் மோதிய வேகத்தில் டிரக் சுக்குநூறாக உடைந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக, ரயில் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. உடனடியாக மீட்புப் பணிகள் நடைபெற்று ரயில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR