உயிர் விலைமதிப்பற்றது! இதுபோன்ற அபாய அட்டகாசம் வேண்டாம் -அதிர்ச்சி வீடியோ

வைரல் வீடியோ: தயவுசெய்து இதுபோன்று செயல்களில் யாரும் ஈடுபடாதீர்கள், செய்யாதீர்கள். மற்றவர்களையும் இதைச் செய்ய விடாதீர்கள். சாகசங்களில் உங்கள் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம். உயிர் விலைமதிப்பற்றது என்பதை உணருங்கள்.

Written by - ZEE Bureau | Last Updated : Sep 16, 2021, 08:10 PM IST
  • உயிர் விலைமதிப்பற்றது. உயிரைப் பணயம் வைக்க வேண்டாம்.
  • இதுபோன்ற சாகசங்கள் செய்யும் போது சிலர் தங்கள் உயிரை கூட இழந்துள்ளனர்.
  • ஓடும் ரயிலில் சாகசங்களில் ஈடுபடக்கூடாது. மிகவும் ஆபத்தானவை.
உயிர் விலைமதிப்பற்றது! இதுபோன்ற அபாய அட்டகாசம் வேண்டாம் -அதிர்ச்சி வீடியோ

வைரல் வீடியோ: தங்கள் வீர திறமைகளையும், துணிச்சலையும் காட்டும் முயற்சியில், இளைஞர்கள் அடிக்கடி ஓடும் வாகனங்களில் ஆபத்தான முறையில் சாகசங்களில் ஈடுபட முயற்சி செய்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள். இத்தகைய முயற்சிகள் மிகவும் ஆபத்தானவை மற்றும் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று சொல்லத் தேவையில்லை. 

ஓடும் ரயிலில் ஏறவோ இறங்கவோ கூடாது. தொங்கியப்படி செல்லக் கூடாது, சாகசங்களில் ஈடுபடக்கூடாது என எத்தனை முறை எச்சரித்தாலும், இதுபோன்ற அட்டகாசத்தில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. ஆனால் அதன் விளைவுகளை அவர்கள் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. 

இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஓடும் ரயிலில் சில ஆபத்தான சாகசங்களை ஈடுபடுவது குறித்த ஒரு பழைய வீடியோ இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.

அதிர்ச்சியூட்டும் அந்த வீடியோவில், ஓடும் ரயிலில் ஏறும் அந்த இளைஞன் ரயில் கதவின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு, பிளாட்பாரத்தில் சறுக்கிக்கொண்டே வருவதைக் காணலாம். பிளாட்பாரத்தை தாண்டிய பிறகு, ரயில் பாதையின் அருகில் உள்ள கம்பத்தை மீண்டும் மீண்டும் குதிப்பது மற்றும் தொடுவது போன்ற பல சாகசங்களை அவர்கள் செய்கிறார். இதுமட்டுமின்றி, கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு ரயிலில் இருந்து குதித்து சுவற்றின் மேல் நடக்கிறார். அடுத்த ஸ்டேஷன் வந்தவுடன், அவர் தனது நண்பர்களுடன் ரயிலில் இருந்து இறங்கி செல்கிறார்.

ALSO READ | வேகமாக வந்த பஸ்ஸுக்கடியில் சிக்கிய இளைஞர், பதபதைக்க வைக்கும் Video

இந்த வீடியோ ட்விட்டர் பக்கத்தில் Cazz inculo என்ற பயனரால் பகிரப்பட்டது.

 

வீடியோவைப் பார்த்த பலர், உயிரிழப்பு ஆபத்தை உணராமல் அந்த இளைஞர்களின் செயல்களை கண்டு மக்கள் அச்சமடைந்தனர். சாகசங்கள் என்ற பெயரில் இதுபோன்ற அட்டகாசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்தினர். கடந்த காலங்களிலும், இதுபோன்ற பல ஸ்டண்ட் முயற்சிகள் சோகமான விளைவுகளை ஏற்படுத்தி இருகின்றன். இதுபோன்ற சாகசங்கள் செய்யும் போது சிலர் தங்கள் உயிரை கூட இழந்துள்ளனர் மற்றும் பலர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

தயவுசெய்து இதுபோன்று செயல்களில் யாரும் ஈடுபடாதீர்கள், செய்யாதீர்கள். மற்றவர்களையும் இதைச் செய்ய விடாதீர்கள். சாகசங்களில் உங்கள் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம். உயிர் விலைமதிப்பற்றது என்பதை உணருங்கள்.

ALSO READ | Shocking Video: அண்ணனை மாடியில் இருந்து தூக்கி வீச முயன்ற தம்பிகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News