நயன்தாரா-அதர்வா நடிப்பில் உருவாகி நாளை வெளியாக இருக்கும் திரைப்படம் 'இமைக்கா நொடிகள்'. இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள  நீயும் நானும் பாடலினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் அதர்வா, நயன்தாரா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 


அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா நடித்திருக்கிறார். மேலும் அதர்வா அக்காவாக நயன்தாரா நடிக்கிறார். நயன்தாராவின் கணவராக விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இவர்களை தவிர பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் வில்லனாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். 



அத்துடன் இப்படத்தில் ரமேஷ் திலக், தேவன், உதய் மகேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார். 


முன்னதாக இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'நீயும் நானும்' பாடலினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.