நாட்டு சரக்கை குடித்து விட்டு மட்டையான யானைகள்... படாத பாடுபட்டு எழுப்பிய வனத்துறையினர்!
ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள ஒரு வனப்பகுதியில் 24 யானைகள் கொண்ட கூட்டம் மிகுந்த போதை காரணமாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது காணப்பட்டது.
புவனேஸ்வர்: ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் பாரம்பரிய நாட்டு சரக்கான மஹூவா எனப்படும் பானத்தை உண்ட 24 யானைகள் கொண்ட கூட்டம் மிகுந்த போதை காரணமாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததைக் கண்டு கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஷிலிபாடா முந்திரி காடுகளுக்கு அருகில் வசிக்கும் கிராம மக்கள், ‘மஹுவா’ என்ற நாட்டு மதுபான வகையை தயார் செய்வதற்காக காட்டுக்குள் சென்றபோது, யானைக்கூட்டம், போதை தரும் பூக்கள் போட்டு காய்ச்சப்பட்ட பானத்தை ஏற்கனவே குடித்துவிட்டு, ஆந்த போதையில் இருப்பதைக் கண்டனர்.
குடிபோதையில் இருந்த 24 யானைகள், பெரிய தொட்டிகளில் புளிக்கவைப்பதற்காக தண்ணீரில் மஹுவா பூக்கள் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அருகில் தூங்கிக் கொண்டிருந்தன. ஒன்பது ஆண் யானைகள், ஆறு பெண் யானைகள் மற்றும் ஒன்பது குட்டி யானைகள் இருந்தன. “காலை 6 மணியளவில் நாங்கள் மஹுவா பானத்தைத் தயாரிப்பதற்காக காட்டுக்குள் சென்றோம். அனைத்து பானைகளும் உடைந்திருப்பதையும், புளிக்கவைக்கப்பட்ட தண்ணீரைக் காணவில்லை என்பதையும் கண்டோம். யானைகள் அருகில் தூங்குவதையும் கண்டோம். அவர்கள் காய்ச்சிய தண்ணீரை உட்கொண்டு போதை ஏறி இருப்பதை புரிந்து கொண்டோம், ”என்று ஒரு கிராமவாசி நரியா சேத்தி கூறினார். “அந்த மதுபானம் பதப்படுத்தப்படாமல் இருந்தது. நாங்கள் யானை எழுப்ப கடுமையாக முயற்சித்தோம் ஆனால் முடியவே இல்லை. பின்னர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது,'' என்றார்.
மேலும் படிக்க | குட்டி யானைக்கு குசும்பு ஜாஸ்தி தான்... வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ!
தகவல் கிடைத்து படானா வனப்பகுதிக்கு உட்பட்ட காட்டில் உள்ள இடத்திற்கு வந்த வனத்துறை பணியாளர்கள் கூட்டத்தை எழுப்ப மேளம் அடித்தனர். பின்னர், கடுமையான முயற்சிகளுக்கு பின் யானைகள் வனப்பகுதிக்குள் சென்றதாக வனக்காப்பாளர் காசிராம் பத்ரா தெரிவித்தார். காலை 10 மணியளவில் யானைக் கூட்டம் அந்த இடத்தை விட்டு வெளியேறியது என்று சேதி கூறினார். இருப்பினும், வனத்துறை அதிகாரிக்கு, யானைகள் புளித்த மஹுவாவை குடித்ததால் தான் தூங்கிக் கொண்டிருந்ததா என்பது உறுதியாக தெரியவில்லை. "ஒருவேளை, அவர்கள் அங்கே ஓய்வெடுத்துக் கொண்டிருக்கலாம்," பத்ரா கூறினார்.
மறுபுறம், செவ்வாய்க்கிழமை உடைந்த பானைகளுக்கு அருகிலுள்ள பல்வேறு இடங்களில் யானைகள் போதையில் தூங்குவதைக் கண்டதாக கிராம மக்கள் வலியுறுத்தினர். மஹுவா மரத்தின் பூக்களைக் (மதுகா லாங்கிஃபோலியா) கொண்டு மஹுவா என்றும் அழைக்கப்படும் மதுபானம் தயாரிக்க, முன்னதாக புளிக்கவைக்கப்படுகின்றன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பழங்குடியின ஆண்களும் பெண்களும் பாரம்பரியமாக இந்த மதுபானத்தை தயாரிக்கின்றனர்.
மேலும் படிக்க | Viral Video: காப்பாற்றிய பெண்ணிற்கு 'நன்றி' கூறிய குட்டி யானை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ