Viral Video: ‘எங்களுக்கும் தெரியும்... நாங்களும் வாசிப்போம்ல’; டிரம்ஸ் வாசிக்கும் யானை!

யானைகளும் நம்மைப் போலவே எண்ணங்கள், ஆழமான உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை அனுபவிக்கும் திறன் கொண்டவை.  சேட்டை செய்யும் யானைகளையும் குட்டி யானைகளையும் பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தான். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 31, 2022, 09:20 PM IST
  • வைரல் வீடியோவில் அவ்வப்போது யானை ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் பிளறுகிறது
  • இந்த வீடியோவை soorya_puthran_karnnan இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
  • சமூக ஊடகங்களில் வைரலாகும் யானை வீடியோ.
Viral Video: ‘எங்களுக்கும் தெரியும்... நாங்களும் வாசிப்போம்ல’; டிரம்ஸ் வாசிக்கும் யானை! title=

வைரல் வீடியோ:  யானைகளின் ஆட்டத்தையும்,  வேடிக்கையாப்ன செயல்கலையும் ரசிக்காதவர்கள் யாரும் இல்லை. இதுபோன்ற வீடியோக்களைப் பார்ப்பதற்காகவே சமூக ஊடகங்களைத் தொடர்ந்து உலாவுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த வீடியோக்கள் யானைப் பிரியர்களாளை மட்டுமல்ல, அனைவரின் மன அழுத்தத்தையும் போக்கி மனதை லேசாக்கும் திறன் கொண்டவை. யானைகளும் நம்மைப் போலவே எண்ணங்கள், ஆழமான உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை அனுபவிக்கும் திறன் கொண்டவை.  சேட்டை செய்யும் யானைகளையும் குட்டி யானைகளையும் பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தான். அதிலும் ஒரு இடத்தில் நிற்கமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருக்கும் குட்டி யானைகள் எது செய்தாலும் அவை ரசிக்கத் தகுந்ததாகவே இருக்கும். 

இந்நிலையில், வேலிக்கு பின்னால் நின்று கொண்டு யானை மேளம் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெளிநாட்டில் உள்ள சில விலங்குகள் பூங்காவில் இருந்து வீடியோ எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது. வேலிக்கு மறுபுறம் நிற்கும் நபர் முதலில் டிரம்ஸை மெதுவாக அடித்து இடையில் நிறுத்துகிறார். உடனே, யானை மெதுவாக தனது தும்பிக்கையை நீட்டி, மேளம் அடிக்கத் தொடங்குகிறது.

வைரலாகி வரும் யானை வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by  (@soorya_puthran_karnnan)

மேலும் படிக்க | குட்டி யானைக்கு குசும்பு ஜாஸ்தி தான்... வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ!

வீடியோவில்  யானை அவ்வப்போது யானை ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒலி எழுப்புகிறது. அந்த வீடியோ பகிரப்பட்ட உடனே வைரலானது. இந்த வீடியோவை soorya_puthran_karnnan இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை பகிரப்பட்ட உடனேயே, சிறிது நேரத்திலே பலர் பார்த்துள்ளனர். யானைககள் குறும்பு செய்யும் வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகின்றன. யானையின் செயல்கள் பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் சில சமயங்களில் விநோதமாகவும் இருப்பதால் அவை நம் மனதை லேசாக்குகின்றன.  அந்த வகையில், யானை ஒன்று,  டிரம்ஸ் வாசிக்கும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | Viral Video: காப்பாற்றிய பெண்ணிற்கு 'நன்றி' கூறிய குட்டி யானை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News