ராட்சத அனகோண்டா பாம்பை கையில் பிடித்த மீனவர்; திகைக்க வைக்கும் வீடியோ
படகில் செல்லும்போது மீனவர் ஒருவர் ராட்சத அனகோண்டா பாம்பை கையில் பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. மிக நீளமான அந்த பாம்பை அவர் பிடித்தது காண்போரை திகைக்க வைக்கிறது.
பாம்புகள் என்றால் நடுங்காத படையே இருக்காது. உண்மயில் அவை மனிதர்களை அநாவசியமாக தீண்டாது என்றாலும், அதனை பார்த்தால் ஒருவித குலை நடுங்க வைக்கும் பயம் வந்துவிடும். காரணம், அந்த பாம்புகள் கொத்தினால் நொடியில் விஷம் ஏறி உயிரை மாய்த்துவிடும் அச்சம் பரவலாக இருக்கிறது. அனைத்து பாம்புகளிடத்திலும் விஷம் இல்லை என்றாலும், எந்த பாம்பிடம் விஷம் இருக்கிறது, எந்த பாம்பிடம் விஷம் இல்லை என்ற புரிதல் எல்லோருக்கும் தெரிந்திருப்பதில்லை.
பாம்புகளை பொறுத்தவரை தங்களை காப்பாற்றிக் கொள்ளவே முக்கியத்துவம் கொடுக்கும். அதற்காக அவை எப்போதும் எச்சரிக்கையாக இருக்கும். ஆபத்து வரும் என்று தெரிந்தால் முன்னெச்சரிக்கையாக இருக்கும். குறிப்பாக இருக்கும் இடத்தில் இருந்து துளி சத்தமில்லாமல் நகர்ந்துவிடும். அந்த நேரத்தில் யாரேனும் குறுக்கே வந்தாலோ அல்லது இடையூறு ஏற்படுத்துகிறார் என்று தோன்றினாலோ கொத்துவதற்கு நொடியும் யோசிக்காது. அப்படி இருக்கையில் ஒருவர் அசால்டாக ராட்சத அனகோண்டா பாம்பை கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார்.
மீனவர் என்பதால் அவரிடம் பயம் ஏதும் இல்லை. ஏனென்றால் அப்பகுதியில் வசிக்கும் அவருக்கு பாம்புகளை பற்றிய நல்ல புரிதல் இருந்திருக்கிறது. அதனால் மீன் பிடிக்க செல்லும்போது ஆற்றில் இருந்த ராட்சத அனகோண்டா பாம்பு அவரிடம் பிடிபட்டுவிடுகிறது. அவரும் ஜாலியாக பாம்பை பிடித்து சிறிது நேரம் விளையாட்டு காட்டி நீரில் விடுகிறார். மிக நீளமான ராட்சத உருவம் கொண்ட அந்த பாம்பு அதிவேகமாக தண்ணீரில் நீந்தி செல்கிறது. காண்போருக்கு திகைப்பை ஏற்படுத்தும் இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
மேலும் படிக்க | ஆட்டம் போட்ட பாம்பு, அசால்டாய் பிடித்து அடைத்த பெண்: ஆச்சரியத்தில் நெட்டிசன்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ