Viral Video: இணையத்தில் விலங்குகளின் பல வேடிக்கையான மற்றும் அழகான வீடியோக்கள் நிரம்பியுள்ளன. தற்போது அப்படி ஒரு வீடியோ நெட்டிசன்களின் இதயங்களை கவர்ந்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வீடியோவில் ஒரு குரங்கு (Monkey) மற்றும் ஒரு மானின் நட்பு காணக்கிடைக்கிறது. இதில், மானின் முதுகில் குரங்கு சவாரி செய்யும் அற்புதமான காட்சியை நாம் காண முடிகிறது. சவாரி செய்வதோடு மட்டுமல்லாமல், அந்த குரங்கு தன்னுடைய நண்பனை விட்டு பிரிய மனமில்லாமல் இருப்பதையும் வீடியோவில் நாம் காண முடிகின்றது.


வைரல் ஹாக் என்ற இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில், “இந்த குரங்கு விடுவதாக இல்லை” என்ற தலைப்புடன் பகிரப்பட்ட வீடியோ விரைவிலேயே வைரல் ஆனது.


இந்த வைரல் வீடியோ (Viral Video) கிளிப்பில், குரங்கு ஒரு மானின் மீது அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது. ஒரு பெரிய தோட்டப் பகுதிக்குள் உள்ள ஒரு பாதையில் மான் நடக்கத் தொடங்குகிறது. வீடியோவை தொடர்ந்து பார்த்தால், குரங்கு அதன் முதுகில் உட்கார்ந்திருப்பதால், மான் நடக்க முடியாமல் நடப்பதை நாம் காணலாம்.



ALSO READ: Viral Video: முழு மானை விழுங்கும் மலைப்பாம்பு நெஞ்சைப் பதபதைக்கும் வீடியோ


வீடியோவின் முடிவில், மான் (Deer) ஓடத் தொடங்குகிறது. குரங்கோ எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடும் நிலையில், முதுகின் விளிம்பில் இருக்கிறது. ஆனால், சரியான நேரத்தில் குரங்கு சமநிலையைப் பெற்று விடுகிறது.


சமூக வலைதளங்களில் இது போன்ற அற்புதமான, வேடிக்கையான விலங்கு வீடியோ வைரல் ஆவது இது முதல் முறை அல்ல. சமீபத்தில், ஒரு அழகான நாய் தனது குதிரை நண்பனை வாக்கிங் அழைத்துச் செல்லும் மற்றொரு வீடியோ மிகவும் வைரல் ஆனது.


அந்த வீடியோ கிளிப்பில், ஒரு சிறிய கருப்பு நாய், கழுத்தில் கயிறுடன் இருந்த ஒரு பெரிய குதிரையை கயிற்றை பிடித்துக்கொண்டு அழைத்துச் செல்வதைக் காண முடிந்தது. இரு விலங்குகளும் வயல்வெளி மற்றும் தொழுவத்தில் செய்த வாக்கிங்கை மிகவும் ரசித்ததாகத் தெரிகிறது.


ALSO READ: Viral Video: சீறிப் பாயும் நாகப் பாம்பை தண்ணீர் கேனில் அடைத்த மந்திரவாதி..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR