Viral Video: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. திருமணம் (Marriage) என்பது அனைவரது வாழ்விலும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். திருமண தின நிகழ்வுகளை நாம் ஒவ்வொரு நாளும் நம் மனதில் எப்போதும் நினைத்துப் பார்க்கிறோம்.


பொதுவாக தன்னுடைய திருமணத்தில் தன்னுடைய வருகை ஒரு பிரம்மாண்டமான முறையில் இருக்க வேண்டும் என திருமணம் புரிந்துகொள்ளும் மணமகளும் மணமகனும் நினைப்பது வழக்கம். 


மறக்கமுடியாத மற்றும் அற்புதமான நடன நிகழ்ச்சிகள் இல்லாமல் திருமணங்கள் முழுமையடைவதில்லை. இந்த நாட்களில், மணமக்கள் எந்த வித தயக்கமும் இல்லாமல் அட்டகாசமான முறையில் தாங்களே இந்த நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்கள். தங்கள் வாழ்வின் மிக முக்கியமான தருணத்தை மறக்கமுடியாததாக்க முயற்சிக்கிறார்கள். தங்கள் திருமணத்தில் அசத்தலான முறையில் நடனமாடி, அனைவரது கவனத்தையும் கவர்ந்த ஒரு ஜோடியின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் (Social Media) வைரல் ஆகி வருகின்றது.


திருமண சடங்குகள் முடிந்ததும் மணமகனும், மணமகளும் DJ நடன மேடையில் தங்கள் ஆட்டத்தைத் துவக்கினர். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. பின்னணியில் 'இன் த கெட்டோ' என்ற வைரல் பாடல் ஒலிக்கையில், ​​மணமகளும், மணமகனும் முழு ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் ஆடுகிறார்கள். அவர்களை திருமணத்துக்கு வந்த விருந்தினர்களும் உற்சாகப்படுத்துகிறார்கள்.


பின்னர், உற்சாக மிகுதியில், மணமகன் மணமகளை தூக்குகிறார். சில நொடிகளுக்கு அவர்  தன் சமன்பாட்டையும் இழந்துவிடுகிறார். அதிர்ஷ்டவசமாக, இருவரும் தங்கள் சமநிலையை மீண்டும் பெற்று, பெரிய அளவில் காயம் எதுவும் ஏற்படாமல் தப்பிக்கிறார்கள்.


ALSO READ: Watch Viral Video: படம் எடுத்து ஆடும் நாகப்பாம்பு ஜோடி; இது காதலா; இல்லை ஊடலா! 


WedAbout என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் இந்த வீடியோவை (Viral Video) பகிர்ந்துள்ளது. இப்படிப்பட்ட துடிதுடிப்பான ஜோடியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


வைரலாகும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:



4 நாட்களுக்கு முன்பு பகிரப்பட்ட இந்த வீடியோ வைரலாகி, இதுவரை 3400-க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது. இந்த ஜோடியின் மகிழ்ச்சியான நடனத்தை பயனர்கள் விரும்பி பார்த்து வருகிறார்கள்.


நெட்டிசன்கள் கமெண்ட் பகுதியில் பல ஹார்ட் இமோஜிக்களை குவித்து வருகின்றனர். மேலும், இந்த ஜோடியை மக்கள் வாழ்த்தியும் வருகின்றனர்.


ALSO READ:Viral Video: மனதில் தைரியம் இருப்பவர்கள் மட்டுமே பார்க்க வேண்டிய வீடியோ! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR