Viral Video: மனதில் தைரியம் இருப்பவர்கள் மட்டுமே பார்க்க வேண்டிய வீடியோ!

பல்லி, எலி, கரப்பான் பூச்சி, சிலந்தி என சிறு பூச்சிகளைப் பார்த்தாலே பயப்படுபவர்களுக்கு இந்த வீடியோவை பார்த்தால் அருவெறுப்பாக இருக்கலாம்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 31, 2021, 05:09 PM IST
  • வாயைத் திறந்தால் வார்த்தை தானே வர வேண்டும்?
  • வாயில் இருந்து சிலந்தி வந்தால் என்ன செய்வீர்கள்?
  • வைரல் சிலந்தியா? இல்லை வைரல் மனிதரா?
Viral Video: மனதில் தைரியம் இருப்பவர்கள் மட்டுமே பார்க்க வேண்டிய வீடியோ! title=

சிறுவர்களும், மன தைரியம் இல்லாதவர்களும் தயவு செய்து இந்த வீடியோவை பார்க்க வேண்டாம். பல்லி, எலி, கரப்பான் பூச்சி, சிலந்தி என சிறு பூச்சிகளைப் பார்த்தாலே பயப்படுபவர்களுக்கு இந்த வீடியோவை பார்த்தால் அருவெறுப்பாக இருக்கலாம். அப்படி என்ன வீடியோ என்று கேட்கிறீர்களா?

ஒருவர் தனது வாயிலிருந்து பெரிய சிலந்தி ஒன்று வெளியே வருவதை வீடியோவாக பார்த்தால் எப்படி இருக்கும்? சமூக வலைதளங்களில் இந்த அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு நபரின் வாயிலிருந்து ஒரு பெரிய சிலந்தி வெளிவருவதைக் காணலாம்.

சமூக வலைதளங்களில் வீடியோக்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அவை வழக்கத்தில் இருந்து மாறுபட்டதாக இருக்கும். அவற்றில் மிகவும் வேடிக்கையான, விளையாட்டான வீடியோக்கள் இருக்கும். இந்த வீடியோக்களை ஒரு முறை அல்ல பல முறை பார்க்க விரும்புகிறார்கள். ஆனால், இதுபோன்ற அரிதான வீடியோக்களும் அவ்வப்போது வைரலாகின்றன.

 

இந்த காணொளியில் ஒருவர் வாயைத் திறந்தவுடன் அவரது வாயிலிருந்து ஒரு பெரிய சிலந்தி வெளிவருவதைக் காணலாம். சிலந்திகளுக்கு பயப்படுபவர்கள் மட்டுமல்ல,  தைரியசாலிகள் கூட பயப்படுகிறார்கள். சிலந்தியுடன் இந்த மனிதன் விளையாடுவதை இந்த அதிர்ச்சி வீடியோவில் காணலாம். அந்த நபர் எதோ பேசுவதற்காக வாயைத் திறக்கிறார். வாயைத் திறந்தவுடன், அவரது வாயிலிருந்து சிலந்தி வெளியேறுகிறது. 

இந்த வீடியோவைப் பகிர்ந்த இந்த நபர் யார் என்ற கேள்வி எழுகிறதா? மிருகக்காட்சிசாலையில் பணியாற்றும் ஒருவர் இவர் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  'The Reptile Zoo' என்ற மிருகக்காட்சிசாலையில் வேலை பார்க்கும் இந்த நபர் இன்ஸ்டாகிராமில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகிறார்.

இந்த நபரை சமூக ஊடகங்களில் ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள். இந்த நபரின் பெயர் ஜே ப்ரூவர். ப்ரூவரை இன்ஸ்டாகிராமில் 5 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர், 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.  

Also Read | போஸ் கொடுத்த பாம்பு, கிஸ் கொடுத்த நபர், வைரலான வீடியோ!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News