Snake Viral Video: பாம்பு என்றாலே நம்மில் பலருக்கும் பயம் கலந்த பதற்றமே முதலில் வரும். அது மலைப் பாம்போ, நாகப் பாம்போ, விஷப் பாம்போ அல்லது தண்ணீர் பாம்போ எந்த வகை பாம்பாக இருந்தாலும் பயம் மட்டும் ஒரே மாதிரியாகதான் இருக்கும். கிராமப்புறங்களில் அதுவும் இதுபோன்ற மழைக்காலங்களில் பாம்பை பார்ப்பது என்பது வாடிக்கையான ஒன்றாக இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வயல் பகுதிகளில், மரங்கள் அடர்ந்த பகுதிகள் அவர்கள் பாம்பை பார்த்தால், பயப்படாமல் மெதுவாக அதற்கு தொந்தரவு அளிக்காமல் சென்றுவிடுவார்கள். அதேபோல், பாம்பு வீட்டுக்குள் வந்துவிட்டாலும் கூட அதனை பெரும்பாலும் காயப்படுத்தாமல் அதை வெளியேற்றுவார்கள் அல்லது வனத்துறைக்கு தகவல் அளித்து அவர்கள் மூலம் வெளியேற்றுவார்கள். பாம்பை குறித்து பயப்படாமல் இருப்பதே அவை உங்களை தாக்காமல் இருப்பதற்கான முதல் விஷயம் ஆகும். 


இன்ஸ்டாகிராமில் வைரலாகும் வீடியோ


அந்த வகையில், விலங்குகள் நல ஆர்வலரான ஒருவர் தனது பிறந்தநாளை பல மலைப் பாம்புகளின் மேல் படுத்துகிடந்து கொண்டாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் (Instagram Viral Video) ஆகி வருகிறது. இந்த வீடியோ குறித்த முழு விவரத்தையும் இதில் காணலாம்.


மேலும் படிக்க | பாய் போட்டு படுத்திருந்த மலைப்பாம்பு - பக்கத்தில் குழந்தை... அதை பார்க்காத தாய் - பகீர் வீடியோ


யார் அந்த நபர்?


அமெரிக்காவின் காலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள பவுண்டைன் வேலி என்ற இடத்தில் The Reptile Zoo எனும் பாம்பு, முதலை போன்ற ஊர்வன விலங்குகளுக்கான மிருகக்காட்சிசாலையை நடத்தி வருகிறார், ஜே ப்ரூவர். பாம்புகள், முதலைகள் உள்ளிட்ட ஊர்வன விலங்குகள் மேல் தீராத பிரியம் கொண்டவரான ஜே ப்ரூவர் இந்த மிருகக்காட்சிசாலையை 20 பணியாளர்களுடனும், தனது மூன்று மகளுடனும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இந்த மிருகக்காட்சிசாலை குறித்தும், ஊர்வன விலங்குகள் குறித்தும் அவர் @jayprehistoricpets என்ற தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டு வருகிறார்.