விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் எப்போதும் எவர்க்ரீன் வைரல் ஆகும். இவற்றில் சில பயத்தை ஏற்படுத்தினால், சில வியப்பளிக்கும். தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோக்களில் பல வீடியோக்கள் வித்தியாசனமானதாகவும் நாம் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாதவைகளாகவும் இருக்கின்றன. ஆனால், அவை பார்ப்பதற்கு சுவராசியமாக இருப்பதால், பலரும் பார்த்து ரசிக்கின்றனர். அதிலும், நிலத்திலும், நீரிலும் வாழும் முதலை வீடியோக்களில் பெரும்பாலானவை அச்சத்தையே ஏற்படுத்தும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் மனிதர்கள் மிகவும் பயப்பட கூடிய ஒரு சில விலங்குகளில் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுவது முதலை. இதன் வலுவான மற்றும் கரடு முரடான சருமம் மற்றும் கூர்மையான பற்கள் பார்க்கும் நம்மை மிரட்டும் வகையில் இருக்கும். அதன்படி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோ 31 அடி நீளம் கொண்ட முதலையை தொடர்புடையது. இந்த வீடியோ வித்தியாசமாக இருக்கிறது.


மேலும் படிக்க | எப்புட்றா..ஆற்றில் அசால்டாக பைக் ஓட்டும் நபர்: வீடியோ வைரல்


ஆப்பிரிக்காவில் ராட்சத முதலையின் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது பரவி வருகிறது. இது டாங்கனிகா ஏரியின் கரையை வேட்டையாடும் இடமாக மாற்றியது. முதலையின் பின்னால் அமர்ந்திருப்பவர்களுடன் ஒப்பிடுகையில், அதன் பிரம்மாண்டமான அளவு தெரிந்ததால் அதன் புகைப்படம் கவனத்தை ஈர்த்தது.


சர்வதேச உண்மைச் சரிபார்ப்பு இணையதளமான ஸ்னோப்ஸ் அறிக்கையின்படி, வைரலான படம் ஸ்டீவ் கர்லேவால் எடுக்கப்பட்டது. அவர் கிராமப்புற ஜிம்பாப்வே சமூகங்கள் மற்றும் தேசிய பூங்காக்களுடன் பணியாற்றினார். இந்த முதலை வளர்ந்த மாடுகளைக் கொன்று, உள்ளூர் மக்களுக்கு ஒரு பிரச்சனையாக மாறியது. இறுதியாக, அது ஜிம்பாப்வே-மொசாம்பிக் எல்லையில் கடந்த ஆனந்து சுட்டிக்கொல்லப்பட்டது. மேலும் இந்த முதலை 15 அடி நீளம் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.



இந்த வீடியோ தற்போது பார்ப்பவர்களை அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறது. மேலும் இந்த வீடியோ @AmazingNature00 என்கிற டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.


மேலும் படிக்க | குட்டியை சீண்டிய சிங்கத்துக்கு நேர்ந்த கதி - வைரல் வீடியோ


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ