முதலையை துடிதுடிக்க பதம் பார்த்த 150 கிலோ மலைப்பாம்பு..வீடியோ வைரல்

150 Kilo Python Swallows Alligator: 150 கிலோ எடை கொண்ட மலைப்பாம்பு ஒன்று பெரிய சைஸ் முதலை வகையான அலிகேட்டரை விழுங்கி பதம் பார்க்கும் வீடியோ இணையவாசிகளை மிரள வைத்துள்ளது. இது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 8, 2023, 09:09 AM IST
  • இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும்.
  • இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.
  • இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
முதலையை துடிதுடிக்க பதம் பார்த்த 150 கிலோ மலைப்பாம்பு..வீடியோ வைரல் title=

மலைப்பாம்பின் வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான உலகமாகும். இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத பல விஷயங்களை காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. அதிலும் விலங்குகளின் வீடியோகளுக்கென தனி மவுசு. விலங்குகளின் வைரல் வீடியோவை காண தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் சுவாரஸ்யமான இணைய உலகத்தில் சமீப காலங்களில் காட்டு விலங்குகளின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பட்டையை கிளப்பி வருகின்றன. சமூக ஊடக உலகில், ஒவ்வொரு நாளும் விலங்குகளின் வெவ்வேறு வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அதிலும் பாம்பு வீடியோவுக்கு அதிகளவு மவுசு உள்ளது. அந்தவகையில் தற்போது வெளிவந்துள்ள காணொளி முற்றிலும் மாறுபட்டது. இந்த வீடியோ காட்டில் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 'ஒண்ணுகூட நல்லா இல்லையே!!’: மொபைல் பார்த்து மாஸ் காட்டும் குரங்கு, வைரல் வீடியோ

இந்த வீடியோவில், 150 கிலோ எடை கொண்ட மலைப்பாம்பு ஒன்று ராட்சத முதலையை, துடிதுடிக்க பதம் பார்த்து விழுங்குகிறது. அந்த முதலை பெரிய சைஸ் முதலை வகையான அலிகேட்டர் ஆகும். வீடியோ பார்ப்பதற்கு கிடுகிடுக்க வைக்கிறது. மலைப்பாம்பு தனது முழு பலத்தை அந்த முதலையின் மீது போட்டு அதை கொலை செய்து விழுங்குவதை இந்த வீடியோவில் நீங்கள் காணலாம். இறுதியில் என்ன நடக்கிறது என்பதை வீடியோவில் கண்டால் கட்டாயம் நீங்கள் அதிர்ச்சியடைந்துவிடுவீர்கள். 

திகிலூட்டும் வீடியோவை இங்கே காணுங்கள்: 

இந்த வீடியோ beautiful_new_pixandwild_animal_pix என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.

(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | தலை இல்லாமல் பயங்கரமாய் தாக்கிய பாம்பு: ஷாக் ஆன நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News