தலை இல்லாமல் பயங்கரமாய் தாக்கிய பாம்பு: ஷாக் ஆன நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

Shocking Snake Video: தலை இல்லாத பாம்பு தாக்குமா? கண்டிப்பாக அப்படி நடக்காது என நீங்கள் நினைத்தால் அது தவறு. இந்த வீடியோவில் அதற்கான சான்று உள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 7, 2023, 03:26 PM IST
  • வீடியோவில் தலை துண்டுக்கப்பட்ட ஒரு பாம்பையும், ஒரு நபரையும் காண முடிகின்றது.
  • அந்த நபர் தன் கையில் ஒரு கத்தரிக்கோலை வைத்திருக்கிறார்.
  • கத்தரிக்கோலால் பாம்பின் வால் பகுதியை அவர் பிடிக்கிறார்.
தலை இல்லாமல் பயங்கரமாய் தாக்கிய பாம்பு: ஷாக் ஆன நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ title=

எந்தவொரு உயிரினத்தின் தலையும் உடலில் இருந்து துண்டிக்கப்பட்டால் அந்த உயிரினம் சில நொடிகளில் இறந்துவிடும். சில உயிரினங்கள் 1 நிமிடம் கூட தாண்டாது, அதற்கு முன்னதாகவே உயிர் போய்விடும். ஆனால், இந்த பதிவில் நாம் காணும் வீடியோவில் இதற்கு முற்றிலும் மாறான ஒரு விஷயம் நடப்பதை காண்கிறோம். இது தலை துண்டிக்கப்பட்ட ஒரு பாம்பி வீடியோ.

பாம்புகளை பற்றிய பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இவை உடனடியாக வைரலும் ஆகின்றன. பாம்புகளை கண்டால் மக்களுக்கு பயம் உண்டு என்றாலும், இணையத்தில் இவற்றை காணும் ஒரு வாய்ப்பையும் அவர்கள் விட்டுவைப்பதில்லை. பாம்புகள் குறித்து எப்போதும் மக்களிடம் ஒரு ஆர்வம் இருந்துகொண்டேதான் இருக்கின்றது.

தற்போது பாம்பின் மிக வித்தியாசமான வீடியோ ஒன்று இணையத்தில் வெளிவந்துள்ளது. இதுபோன்ற வீடியோவை இதுவரை யாரும் பார்த்திருக்க முடியாது. இந்த வீடியோவில் தலை துண்டிக்கப்பட்ட ஒரு பாம்பை காண முடிகின்றது. இதன் தலை ஏதாவது ஒரு விபத்தில் துண்டிக்கப்பட்டதா அல்லது ஆய்வுக்காக வேண்டுமென்றே துண்டிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. 

வீடியோவில் தலை துண்டுக்கப்பட்ட ஒரு பாம்பையும், ஒரு நபரையும் காண முடிகின்றது. அந்த நபர் தன் கையில் ஒரு கத்தரிக்கோலை வைத்திருக்கிறார். கத்தரிக்கோலால் பாம்பின் வால் பகுதியை அவர் பிடிக்கிறார். பின்னர் அதை லேசாக அழுத்துகிறார். ஆச்சரியப்படும் விதமாக, தலை துண்டிக்கப்பட்ட பாம்பு, ஒரு ஆரோக்கியமான பாம்பு தாக்குவதை போல அந்த நபரின் திசையில் தாக்குகிறது.

கண்களால் பார்த்தாலும் நம்ப முடியாத வீடியோவை இங்கே காணலாம்: 

மேலும் படிக்க | புலியின் காதை கடித்து காதல் வளர்க்கும் கரடியின் வீடியோ வைரல்

மேலே நாம் கண்டது ஒரு விசித்திரமான நிகழ்வு. இதை விளக்குமாறு நிபுணர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 
இதற்கிடையில், வீடியோவுக்கு பல வித கமெண்டுகள் வந்த வண்ணம் உள்ளன. 

“இந்த வீடியோவுக்கான இரண்டு அவதானிப்புகள்: 

1. தலை இல்லாத பாம்பு தனது தசைகளில் உள்ள நினைவகத்தின் மூலம், தன்னை தற்காத்துக்கொள்கிறது.

2. பாம்புக்கு தலை இல்லை என்று தெரிந்தாலும், அந்த நபர் பயத்துடன் பின்வாங்குகிறார். இது மனிதனின் தசை நினைவகத்தின் செயல்.” என ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார்.

"தொடப்பட்டுவதை அது அறிந்துகொள்வது புரிகிறது. ஆனால் மூளை இல்லாமல் வலிக்கு எதிர்வினையாற்றுவது எனக்கு குழப்பமாக இருக்கிறது" என மற்றொரு பயனர் கூறியுள்ளார். "தலை இல்லாமல் கூட அற்புதமான துல்லியம்!" என ஒரு பயனர் அந்த பாம்பை பாராட்டியுள்ளார்.

"பாம்புகளால் இதைச் செய்ய முடியும் என்று எனக்குத் தெரியாது, ஆனால் இந்த வீடியோவை போஸ்ட் செய்ததற்கு நன்றி” என ஒருவர் நன்றி கூறியுள்ளார். இந்த வீடியோ யுடியூபில் Ben Hill என்ற நபரின் பக்கத்தில் பகிரப்பட்டு இணையவாசிகளின் கவனத்தை கவர்ந்து வருகிறது. 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | என்னடா வயித்துக்குள்ள..நடுரோட்டில் தவிக்கும் 20 அடி மலைப்பாம்பு..வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News