Anand Mahindra பகிர்ந்த வீடியோவில் பேட்டிங்கில் வெளுத்து வாங்கும் 6 வயது சிறுமி, வீடியோ வைரல்
ஆனந்த் மஹிந்திரா தனது பதிவில் மத்திய இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் கிரேன் ரிஜிஜுவையும் டேக் செய்துள்ளார். அந்த சிறுமியின் பேட்டிங் திறமையை மஹிந்திரா குழுமத் தலைவர் வெகுவாக பாராட்டியுள்ளார்.
Viral Video of Cricketing Girl: ஒரு ஆறு வயது சிறுமி கிரிக்கெட் விளையாடும் வைரல் வீடியோ சமூக ஊடகங்களில் பட்டையைக் கிளப்பி வருகிறது. இந்த வைரல் வீடியோவை சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
ஆறு வயதான அந்த சிறுமியின் பேட்டிங் திறமை ஆனந்த் மஹிந்திராவை கவர்ந்தது. அவர் கிரிக்கெட் விளையாடும் அந்த பெண்ணின் வீடியோவை பகிர்ந்துள்ளார். முதலில் இந்த வீடியோ 'தி பெட்டர் இந்தியா'-வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்டது.
ட்விட்டர் கணக்கில் "நான் ஒரு பெண் என்பதால் நீங்கள் எனக்கு கற்பிக்கவில்லையா?" என்று தலைப்பிடப்படுள்ளது. கோழிக்கோட்டைச் சேர்ந்த ஆறு வயது மெஹக் பாத்திமா தனது மூன்று வயது சகோதரருக்கு தனது தந்தை கிரிக்கெட் கற்பிப்பதைக் கண்டதும் தனது தந்தையிடம் இந்த கெள்வியைக் கேட்டார். ஆகையால், அவர் சிறுமிக்கும் கற்பித்தார். இப்போது இந்த சிறுமி பேட்டிங்கில் வெளுத்து வாங்குகிறார்.
ஆனந்த் மஹிந்திரா (Anand Mahindra) தனது பதிவில் மத்திய இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் கிரேன் ரிஜிஜுவையும் டேக் செய்துள்ளார். அந்த சிறுமியின் பேட்டிங் திறமையை மஹிந்திரா குழுமத் தலைவர் வெகுவாக பாராட்டியுள்ளார்.
29 விநாடிகள் கொண்ட இந்த வைரல் வீடியோவில் (Viral Video) உள்ள சிறுமி, மெஹக் பாத்திமா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சிறுமி, தலை கவசம், கையுறைகள் மற்றும் பேட்களை அணிந்து பேட்ஸ்மேனின் முழு உடையில் கிரிக்கெட் விளையாடுவதைக் காண முடிகிறது.
அந்த பெண் எதிர்காலத்தின் சூப்பர் ஸ்டார் என்று எழுதியுள்ள ஆனந்த் மஹிந்திரா இந்த சிறுமியை கிரேன் ரிஜிஜு கவனிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். "உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் கால்பந்து அல்லது கூடைப்பந்தாட்டத்தில் திறன் படைத்தவர்களாக இருப்பது குறித்து எனக்கு பல செய்திகள் வந்துள்ளன. கேள் உலகமே, இதோ எங்கள் எதிர்கால சூப்பர் ஸ்டார். @KirenRijiju நாம் இந்த சிறுமியை சரியான திசையில் அழைத்துச்செல்ல வெண்டும். இவரது திறமை வீணாகக் கூடாது..." என்று ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார்.
ஆறு வயதான மெஹக் பாத்திமா கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர்.
சிறுமியின் அற்புதமான திறன்களால் நெட்டிசன்களும் (Netizens) ஈர்க்கப்பட்டனர். அவர் இப்போதே முறையான கிரிக்கெட் விளையாட தயாராக இருப்பதாக ட்வீட்டிற்கு சிலர் பதிலளித்தனர். "நிச்சயமாக ஐயா .. எதிர்காலத்தில் இந்தியா பிரகாசிக்க (இதுபோன்ற) சிறந்த திறமை கொண்டவர்களை நாம் ஊக்குவிக்க வேண்டும்" என்று ஒருவர் கமெண்டில் எழுதியுள்ளார்.
"அந்த ஃப்ரிரண்ட் ஃபுட் கவர்...மிக அருமை (sic)" என்று மற்றொரு பயனர் எழுதினார். வேறு ஒரு பயனர், "அற்புதமாக ஆடுகிறார்....இந்த சிறுமியிடம் நல்ல திறமையும் கட்டுப்பாடும் உள்ளது" என்று எழுதியுள்ளார்.
சிறுமியைப் புகழ்ந்து மற்றொரு பயனர், "சிறந்த நுட்பமும் வடிவமும் கொண்டுள்ள அற்புதமான ஆட்டம். இந்த வயதில் என்ன ஒரு அற்புதமான ஆட்டம்" என்று எழுதியுள்ளார்.
ALSO READ: ஆட்டோ மீது வீடு கட்டி அசத்திய இளைஞனை வலைவீசி தேடி வரும் ஆனந்த் மஹிந்திரா!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR