ஆட்டோ மீது வீடு கட்டி அசத்திய இளைஞனை வலைவீசி தேடி வரும் ஆனந்த் மஹிந்திரா!

ஆட்டோ ஒன்றின் மேல் கட்டப்பட்ட மொபைல் வீட்டால் ஈர்க்கப்பட்ட மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா (Auto Home), தனது பொலிரோ ஜீப்பின் மேல், இது போன்ற தொரு வீட்டை கட்ட தன்னுடன் கைகோர்க்க அவரை தேடி வருகிறார். 

Written by - ZEE Bureau | Last Updated : Mar 2, 2021, 01:22 PM IST
ஆட்டோ மீது வீடு கட்டி அசத்திய இளைஞனை வலைவீசி தேடி வரும் ஆனந்த் மஹிந்திரா!

ஆட்டோ ஒன்றின் மேல் கட்டப்பட்ட மொபைல் வீட்டால் ஈர்க்கப்பட்ட மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா (Auto Home), தனது பொலிரோ ஜீப்பின் மேல், இது போன்ற தொரு வீட்டை கட்ட தன்னுடன் கைகோர்க்க அவரை தேடி வருகிறார். 

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகளாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் (Social Media) மூலம் நம்மிடம் வந்து சேர்கிறது. அந்தவகையில், ஆட்டோ ஒன்றின் மேல் கட்டப்பட்ட மொபைல் வீட்டால் ஈர்க்கப்பட்ட மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா (Auto Home), தனது பொலிரோ ஜீப்பின் மேல், இது போன்ற தொரு வீட்டை கட்ட தன்னுடன் கைகோர்க்க அவரை தேடி வருகிறார். அவருக்கு ரிப்ளை செய்துள்ள ஒருவர், இதனை கட்டியவர் நாமக்கல்காரர் என தெரிய தமிழர்கள் குஷியாகி உள்ளனர்.

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, தனது டுவிட்டர் பதிவில், சில புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அதில், அருண் பிரபு (Arun Prabhu) என்பவர், ஆட்டோ ரிக்ஷாவை மொபைல் வீடாக (mobile home) மாற்றிய புகைப்படங்கள் இருந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியிடப்பட்ட இந்த புகைப்படங்களை தற்போது பார்த்துள்ள மஹிந்திரா, அவரது தொழில்நுட்ப திறனை கண்டு வியந்து பாராட்டி இருக்கிறார்.

ALSO READ | மகனின் பர்ஸில் இருந்த ஆணுறை; துணியை துவைக்க எடுத்த அம்மாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

மேலும் அவருடன் தொடர்பு கொள்ள உதவும் படியும், தனது பொலீரோவுக்கு (Bolero) மேல், இது போன்று மொபைல் வீடு ஒன்றை அமைக்க அவர் உதவி செய்யட்டும் என்று பதிவிட்டார். அவரது இந்த டுவிட், 4 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்குகளையும், கமென்ஸ்களையும் குவித்தது. 2,600-க்கும் மேற்பட்ட ரீடுவிட்களை பெற்றது. புகைப்படங்களை பார்த்த பலரும், அருணின் திறமையை வாழ்த்தினர். மேலும் மஹிந்திராவுக்கு பொலீரோ (Bolero) மேல் மொபைல் வீட்டை அவர் அமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

அவரது பதிவுக்கு அஜய்கல்ரா என்ற டுவிட்டர் பயனர், அருண் குறித்த தகவல்கள் தெரிவித்தார். அருண் தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல்லை சேர்ந்தவர் என்றும், ஆட்டோ (Auto) மேல் மொபைல் வீட்டை கட்ட, அவர் ரூ.1 லட்சம் மட்டும் செலவு செய்ததாக பகிர்ந்து கொண்டார்.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News