Family Man 2: மீம்ஸ் மன்னன் செல்லம் சார் மூலம் தடுப்பூசி பிரச்சாரம் செய்யும் அரசு

'தி ஃபேமிலி மேன் 2' படத்தில் மனோஜ் பாஜ்பாய், சமந்தா அக்கினேனி மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில் குறிப்பாக 'செல்லம் சார்' என்ற கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 10, 2021, 07:18 PM IST
  • இணையத்தில் பிரபலமாகிறார் 'தி ஃபேமிலி மேன் 2' படத்தின் செல்லம் சார்.
  • படம் வெளியானதிலிருந்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் எண்ணற்ற மீம்ஸ்களில் இந்த கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளது.
  • தடுப்பூசி செலுத்தலை ஊக்குவிப்பதற்காக இந்திய அரசே செல்லம் சார் கதாபாத்திரத்தின் உதவியை பெற்றுள்ளது.
Family Man 2: மீம்ஸ் மன்னன் செல்லம் சார் மூலம் தடுப்பூசி பிரச்சாரம் செய்யும் அரசு title=

The Family Man 2: மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே OTT தளத்தில் வெளிவந்த 'தி ஃபேமிலி மேன் 2' திரைப்படம், வெளிவந்ததிலிருந்தே அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த படத்தைக் கண்ட பெரும்பாலானோர் இதை பாராட்டி வரும் நிலையில், சிலர் இந்த படம் குறித்து சில விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்றனர். 

'தி ஃபேமிலி மேன் 2' (The Family Man 2) படத்தில் மனோஜ் பாஜ்பாய், சமந்தா அக்கினேனி மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில் குறிப்பாக 'செல்லம் சார்' என்ற கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்துள்ளது. கோலிவுட் நடிகர்-இயக்குனர் உதய் மகேஷ் இந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் வெளியானதிலிருந்து  இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் எண்ணற்ற மீம்ஸ்களில் இந்த கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளது. இணையவாசிகள் செல்லம் சாரை கூகுளுடன் ஒப்பிடுகிறார்கள்.

இப்போது, ​​தடுப்பூசி செலுத்தலை (Vaccination) ஊக்குவிப்பதற்காக இந்திய அரசே செல்லம் சார் கதாபாத்திரத்தின் உதவியை பெற்றுள்ளது. சுகாதார அமைச்சகத்தின் உத்தியோகபூர்வ கணக்கில் வெளியிடப்பட்டுள்ள ஒரு குறிப்பில், ஸ்ரீகாந்த் திவாரி செல்லம் சாரை அழைத்து, தான் கோவிஷீல்ட் செலுத்திக்கொள்ள வேண்டுமா அல்லது கோவாக்சின் செலுத்திக்கொள்ள வேண்டுமா என்று கேட்பது போல் சித்தரிக்கப்பட்டுள்லது. அதற்கு பதிலளிக்கும் செல்லம் சார், அந்த கேள்வியே தவறானது என்றும் அனைத்து தடுப்பூசிகளும் பாதுகாப்பானவையே என்றும் பதிலளிக்கிறார். அவர் மேலும் கூறுகையில், "எப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் கேட்க வேண்டும். எவ்வளவு சீக்கிரம் முடிகிறதோ அவ்வளவு சீக்கிரம் என்பதுதான் பதில். தடுப்பூசி போட்ட பிறகும் கோவிட் நெறிமுறைகளை பின்பற்ற மறக்காதீர்கள்" என்கிறார்.

ALSO READ:Kavin's LIFT: பிக்பாஸ் கவினின் LIFT படம் தொடர்பான வெளியான மாஸ் ட்வீட்

இந்த மீமில், இரு கதாபாத்திரங்களும் ஒரு சர்ஜிகல் மாஸ்கை (Surgical Mask) அணிந்துள்ளது போல் காட்டப்பட்டுள்ளது. 

இந்த மீம் பற்றிய தங்கள் கருத்தை தெரிவித்த ஃபாமிலி மேன் 2-வின் இயக்குனர்கள் ராஜ் & டி.கே, "இது மிகவும் ஆக்கபூர்வமான மற்றும் வேடிக்கையான ஒன்று" என்று கூறியுள்ளனர். 

செல்லம் சார் என்ற கதாபாத்திரம், தனது தனிப்பட்ட பாணியில், வில்லன்களின் திட்டத்தை முறியடித்து கொலை முயற்சியை தோல்வி அடையச் செய்வதில் படத்தின் முக்கிய கதாபாத்திரத்துக்கு உதவும் வகையில் படத்தின் கதை உள்ளது. இதனால் இந்த கதாபாத்திரம் பெரிய அளவில் பிரபலமாகி விட்டது. இந்த கதாபாத்திரம் ஒரு புதுமையான கதாபாத்திரமோ அல்லது மிகவும் புத்திசாலியான கதாபாத்திரமோ இல்லை என்றாலும், மிகவும் வித்தியாசமான, யாரும் ஊகிக்க முடியாத வகையில் இந்த கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் மனதில் தனி இடத்தைப் பெற்றுள்ளது.

ALSO READ: Family Man 2-ல் அவர்களது வலியை உணர்ந்தேன், வேதனையால் நெகிழ்ந்தேன்: பதிவிட்ட சமந்தா, பாராட்டும் ரசிகர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News