மணமேடையில் செம அடி வாங்கிய மணமகன்! அடித்து துவைத்த பெண் சொன்ன காரணம்..
Viral Video : வைரலாகி வரும் ஒரு வீடியோவில், மண மேடையிலேயே ஒரு மணமகன் அடி வாங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Viral Video : இந்தியாவில் கல்யாண சீசன் தொடங்கிவிட்டது. திரும்பும் இடங்களில் எல்லாம் “மாங்கல்யம் தந்துனா நேனா”தான். அப்படி, சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில் நடந்த சம்பவம் ஒன்றுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், திருமணம் செய்து கொள்ள இருந்த மணமகனுக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. என்ன நடந்தது என்பதை, இங்கு பார்ப்போம்.
வைரல் வீடியோ:
தற்போது வைரலாகி வரும் வீடியோவில் முதலில் மணமகளும் மணமகனும் மாலையை மாற்றிக்கொள்கின்றனர். மணமகன் மாலையை போடும் போது, பின்னால் இருந்து ஒரு பெண் அவரை எட்டி உதைக்கிறார். பின்னர் அவரை கீழே போட்டு மிதித்து அடிக்கிறார். சுற்றி இருப்பவர்களும் அந்த மணப்பெண்ணும் அவரிடம் என்ன என்ன என்று கேட்கின்றனர். அதற்கு அந்த பெண் இந்தியிலேயே இவர் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறுகிறார்.
இதைப்பார்த்த நெட்டிசன்கள், இந்த மணமகனை அடித்த பெண் அவரது முன்னாள் காதலியாக இருந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது. மேலும், அந்த பெண்ணை இந்த காதலன் சீட்டிங் செய்து இன்னொரு திருமணம் செய்து கொள்ள வந்திருக்கலாம் என கமெண்ட்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சிலர், இது போன்று ஏதாவது நடந்து விடுமோ என்ற பயத்தால்தான் தனக்கு திருமணம் செய்து கொள்ள பயமாக இருப்பதாக சிலர் கூறு இருக்கின்றனர். மேலும், இன்னொருவர் அந்த பையன் செய்த தவறுக்கு அப்பெண் கொடுத்த தண்டனை சரிதான் என்று கூறியிருக்கிறார். இன்னும் சிலர், பெண்களை ஏமாற்றும் ஆட்களுக்கு இப்படித்தான் நடக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றனர்.
மேலும் படிக்க | ரயிலுக்கு அடியில் படுத்தபடி 250 கி.மீ பயணித்த நபர்! காரணம் கேட்டா ஆடிப்போவீங்க..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ