வைரல் வீடியோ: அனக்கோண்டா பாம்பு தென் அமெரிக்காவிலே நீர்நிலைகளிலும், சதுப்பு நிலங்களிலும் வாழும் மிகப்பெரிய பாம்பினத்தில் ஒன்று. இது பெரும்பாலும் தென் அமெரிக்காவின் வட நாடுகளிலேயே காணப்ப்படுகின்றது. இப்பாம்பைப் பற்றி விளக்கமான அறிவு 1992 ஆம் ஆண்டு வரை ஏதும் அதிகமாய் இல்லை. நன்றாக வளர்ந்த முழுப்பாம்பு சுமார் 8-10 மீ நீளம் இருக்கும் (20-30 அடி), எடையில் 100-200 கிலோ இருக்கும். இது பெரும்பாலும் எலி, ஆடு, மான், தேப்பிர் என்னும் விலங்கு, சிறு கைமன் என்னும் முதலைகள் மற்றும் பறவைகள் முதலியவற்றை சுற்றி வளைத்து நொறுக்கிக் கொன்று உண்ணும். போவா, மலைப்பாம்பு போன்றே இதுவும் இரையை உண்ணுகின்றது, ஆனால் நீர்நிலைக்கு இழுத்துச்சென்று நீரில் முழுகடித்தும் கொல்லும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் இந்த பாம்பு தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது. இதில் 25 அடி நீள அனகோண்டா ஒன்று பதுங்கி கேபிபாரா வேட்டையாடி தாக்கி விழுங்கும் திகிலூட்டும் சம்பத்தை நாம் இந்த காணொளியில் காணலாம். 


மேலும் படிக்க | ‘சீ..’: இந்த வீடியோவை பார்த்து இப்படித்தான் சொல்வீர்கள், மனிதர்களை தலைகுனிய வைக்கும் வைரல் வீடியோ


இந்த நிலையில் தற்போது வைரலாகி வரும் திகிலான வைரல் வீடியோவில், அனக்கோண்டா பாம்பு ஒன்று ஆக்ரோஷத்துடன் வேட்டையாட தண்ணீர் குளத்தின் அருகே ஆங்கின் இங்கும் அலைகிறது. அப்போது அங்கிருந்த கேபிபாரா மிருக்கத்தை வேகமாக தாக்கி விழுங்கும் திகிலூட்டும் சம்பத்தை நாம் இந்த காணொளியில் காணலாம். இதற்குப் பிறகு நடந்ததை பார்த்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.


திகிலூட்டும் வீடியோவை இங்கே காணுங்கள்:



கதிகலங்க வைக்கும் இந்த வீடியோ National Geographic என்கிற யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 


பொதுவாக ஒரு நபர் மீது அனகோண்டா தாக்குதலுக்கு ஒரே ஒரு வழக்கு மட்டுமே உள்ளது என்றாலும், இந்த பாம்பு ஆபத்தான விலங்குகளின் பிரிவில் தன்னை உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது. 


மேலும் படிக்க | சீண்டிய நபரை சும்மா விடுமா குரங்கு? அடாக் செய்த குரங்கு, நொந்துபோன நபர், வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ