வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.
காட்டு விலங்குகள் தொடர்பான பல்வேறு வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்படுகின்றன. இவற்றில், குரங்குகள் மற்றும் லங்கூர்களின் பல வேடிக்கையான வீடியோக்களும் உள்ளன. சில சமயங்களில் இவை தங்களுக்கு இடையில் குறும்பு செய்வதை காண்கிறோம். சில சமயம் இவை மனிதர்களையும் விட்டுவைப்பதில்லை. ஆனாலும் பெரும்பாலும், தங்களை தொந்தரவு செய்யாதவரை அவையும் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. ஆனால், யாரேனும் அவற்றை சீண்டினால், அவர்களுக்கு பதிலடி கொடுக்காமலும் இருப்பதில்லை.
தற்போது வெளிவந்துள்ள ஒரு வீடியோவும் இதையே காட்டுகிறது. ஒரு நபர் குரங்கை சீண்டி பல்பு வாங்குவதை இந்த பதிவில் காண முடிகின்றது.
மேலும் படிக்க | ‘அந்த’ விஷயத்தை கேட்டு வெறித்தனமாக சிரித்த மணமகள்: மேட்டர் இதுதான்!! வைரல் வீடியோ
குரங்கு கொடுத்த பதிலடி
வைரலாகி வரும் இந்த வீடியோவில், தெருவில் உள்ள ஒரு வீட்டு பால்கனியில் குரங்கு ஒன்று காணப்படுகிறது. அதன் எதிரில் ஒரு இளைஞன் நிற்பது தெரிகிறது. இளைஞன் அந்த குரங்கை விரட்ட முயல்கிறார். ஆகையால், அதை அடிப்பது போல நடிக்கிறார். இதைக் கண்ட குரங்கு முதலில் அவரை உற்றுப் பார்க்கிறது. பின்னர், வாய்ப்பு கிடைத்தவுடன் கோவத்துடன் அந்த இளைஞன் மீது பாய்கிறது. மல்யுத்த வீரன் மல்யுத்தத்தில் அறைவது போல் குரங்கு அந்த இளைஞனை அறைகிறது. குரங்கு அந்த இளைஞனை தாக்கிவிட்டு உடனடியாக அங்கிருந்து ஓடிவிடுகின்றது. அந்த இளைஞனுக்கு சில நிமிடங்கள் என்ன நடந்தது என்றே புரியவில்லை.
கடுப்பான குரங்கு செய்த வேலையை இங்கே காணலாம்:
குரங்கு தொடர்பான இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது moin_k47 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். இளைஞன் செய்தது குரங்குக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்பதையும், அதனால், அது மிகவும் கடுப்பானது என்பதையும் வீடியோவை பார்த்து புரிந்துகொள்ள முடிகின்றது.
மேலும் படிக்க | 20 அடி நீள மலைப்பாம்பை விழுங்கிய 25 அடி நீள விஷப் பாம்பு: வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ