பூனைகுட்டினா இதலாம பண்ணனும்! வைரலாகும் வீடியோ!
பூனைக்குட்டி ஒன்று சிறுவனுக்கு வேண்டிய பல உதவிகளை செய்து அந்த சிறுவனுடையே நண்பனை போல சுற்றி திரியும் ஒரு அழகான வீடியோ இணையத்தில் பரவி ரசிகர்களை கவர செய்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் பகிரப்படும் வீடியோக்கள் அதிகளவில் நம்மை வியக்கவைக்கும் வகையிலேயே இருக்கின்றன. அதில் குறிப்பாக நம்மை அதிகம் ஆச்சரியப்படுத்தும் ஒரு சம்பவம் என்னவென்றால் வளர்ப்பு பிராணிகள் அல்லது வனவிலங்குகள் மனிதர்களிடம் நண்பர்கள் போல நடந்துகொள்வது தான். அப்படி ஒரு வீடியோவை தான் இங்கு பார்க்கப்போகிறோம், பூனை ஒன்று சிறுவனுக்கு நண்பன் போல வேண்டிய உதவியெல்லாம் செய்கிறது, இது இணையவாசிகள் பலரையும் ஆச்சர்யப்பட செய்திருக்கிறது. நாம் வீட்டில் வளர்க்கக்கூடிய நாய், பூனை போன்ற வளர்ப்பு பிராணிகள் பெரியவர்களை விட குழந்தைகளிடமும், சிறுவர்களிடமும் தான் அதிகளவில் நெருக்கம் காட்டி வருகின்றது என்பதை இணையத்தில் பகிரப்படும் பல வீடியோக்கள் மூலம் உணர முடிகிறது.
மேலும் படிக்க | சிறுமியை போலவே நடனமாடி காட்டிய யானை! க்யூட் வீடியோ வைரல்!
தற்போது இந்த வீடியோவானது ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது. அந்த வீடியோவில் ஓரு பூனையும், சிறுவனும் நெருக்கமாக இருப்பதை காண முடிகிறது. அந்த சிறுவன் தனது தின்பண்ட டாப்பவை திறக்க முடியாமல் திணறும்போது அந்த பூனை வந்து அச்சிறுவனுக்காக அந்த டப்பாவை திறந்து கொடுக்கிறது. அடுத்த க்ளிப்பில் அந்த பூனை சிறுவனுக்கு பில்டரில் இருந்து தண்ணீர் பிடித்து தருகிறது, அடுத்த க்ளிப்பில் அந்த சிறுவன் கதவின் தாழ்ப்பாளை திறக்க முடியாமல் பூனையை திறக்குமாறு கூற அந்த பூனை தாவிக்குதித்து சிறுவனின் அறைக்கதவை திறந்து விடுகிறது. அதன் பின்னர் சிறுவனும் பூனையும் முகத்தை ஒன்றோடு ஒன்றாக வைத்து கொஞ்சிவிட்டு அந்த சிறுவன் மெத்தையின் மீது படுத்துக்கொள்ள, அந்த பூனை தரையில் படுத்துக்கொள்வதுடன் இந்த வீடியோ முடிவடைகிறது.
இணையத்தில் இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் பலருக்கும் இதுபோன்று ஒரு பூனை நமக்கும் நண்பனாக இருந்தால் எப்படி இருக்கும் என்று பலரும் எங்கும் அளவிற்கு இந்த வீடியோ அமைந்திருக்கிறது. இந்த வீடியோவை பல நூறுகணக்கான இணையவாசிகள் பார்த்து ரசித்துள்ளனர். இந்த வீடியோவிற்கு இதுவரை முப்பத்தி ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்துள்ளது.
மேலும் படிக்க | மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இப்படியா கொஞ்சறது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ