இணையம்  பலவிதமான அற்புதங்களை கொண்டுள்ளது, அதில் நமக்கு வேண்டிய முக்கியமான தகவல்கள் தொடங்கி நம்மை மகிழ்விக்கும் வகையில் சிறந்த பொழுதுபோக்கான நிகழ்வுகள் வரை அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது.  பெரும்பாலும் மற்ற விலங்குகளை காட்டிலும் நாய்கள் அதன் உரிமையாளரிடமோ அல்லது குழந்தைகளிடமோ பாசமாக இருக்கும், குழந்தைகளும் அப்படித்தான் வீட்டில் வளர்க்கும் பிராணிகளை தங்களது நண்பர்களாகவே நினைத்து கொள்ளுவார்கள்.  அதுபோன்று நாய் ஒன்று குழந்தைக்கு பாதுகாப்பு அரணாக செயல்படும் காட்சி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | நாகப்பாம்பை உயிருடன் விழுங்கும் ராட்சஸ பாம்பு; மனதை உலுக்கும் வைரல் வீடியோ..!!



அந்த வீடியோவானது ட்விட்டரில், யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வைரல் வீடியோவில், நீச்சல் குளத்தின் அருகே ஒரு குழந்தையும், அடர்த்தியான முடிகள் கொண்ட ஒரு பெரிய நாயும் இருப்பதை காணலாம்.  அந்த குழந்தை நீச்சல் குளத்தின் அருகே மெதுவாக அடியெடுத்து வைத்து பின்னர் குடுகுடுவென ஓடுகிறது.  உடன் இருந்த நாயும் அந்த குழந்தையுடனேயே ஓடுகிறது, நீருக்கு பக்கத்தில் குழந்தை வந்துவிடாமல் இருக்க, அந்த நாயானது நீருக்கு அருகில் ஓடுகிறது.  ஒரு தாய் எப்படி அவரது குழந்தையை பாதுகாப்பாக பார்த்துக்கொள்வாரோ, அதுபோன்று அந்த நாய் அக்குழந்தையை கவனமாக பார்த்துக்கொள்ள முயற்சி செய்கிறது.  


 



இப்படியே அந்த குழந்தையும், நாயும் நீச்சல் குளத்தின் அருகில் ஓடியாடி விளையாடி கொண்டு இருக்கின்றனர்.  இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவிற்கு இதுவரை முப்பத்தி ரெண்டாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளும், பலவிதமான நல்ல கமெண்டுகளை குவிந்து இருக்கின்றன.  மேலும் இந்த வீடியோவை பல்லாயிரக்கணக்கான இணையவாசிகள் பார்த்து ரசித்துள்ளனர்.


மேலும் படிக்க | Viral Video: பாம்பு என்றால் படை தான் நடுங்கும்... நான் இல்லை; வீர மங்கையின் சாகசம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR