இன்றைய சூழலில் பெரும்பாலும் பலர் வயதானவர்களை நிற்கதியை விட்டுவிடுகின்றனர்.  ஆனால் இங்கு முதியவர் ஒருவருக்கு அவரது குடும்பம் கொடுத்த சர்ப்ரைஸ் இணையத்தில் பரவி பலரின் இதயங்களை கவர்ந்து இருக்கிறது.  அந்த 85 வயது மதிக்கத்தக்க முதியவரின் பிறந்தநாளன்று குடும்பத்தினர் அவரை அழைத்துக்கொண்டு உணவகம் ஒன்றிற்கு சென்று சர்ப்ரைஸாக கேக்கை ஆர்டர் செய்து அவர் முன் நீட்டியதும், இதனை சற்றும் எதிர்பார்த்திடாத அவர் அதிகப்படியான உற்சாகத்தில் ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்.  இணையத்தில் பரவிய இந்த வீடியோவானது சில பார்வையாளர்களின் கல் போன்ற இதயங்களையும் கனிய வைத்திருக்கிறது, அந்த குடும்பத்தினரின் செயலுக்கும் பலவேறு தரப்பிலிருந்து பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மானை இறுக்கும் மலைப்பாம்பு; சிக்கித் தவிக்கும் மான்... ஆனால்... நடந்தது என்ன..!! 


இந்த வைரல் வீடியோவானது குட் நியூஸ் மூவ்மென்ட் என்கிற இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில் உணவகத்தில் முதியவர் ஒருவரும் அவரது குடும்பத்தினரும் அவர்களுக்கான இருக்கையில் அமர்ந்து இருக்கின்றனர்.  அப்போது உணவகத்தில் முதியவருக்கு பின்னால் இருந்து உணவை சப்ளை செய்யும் வெயிட்டர் கேக் துண்டுகள் வைக்கப்பட்டிருக்கும் தட்டு ஒன்றை அவரது கைகளில் ஏந்தி வருகிறார்.  சிறிய புன்னகையுடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறிக்கொண்டே அந்த கேக்கை வெயிட்டர் முதியவரின் முன் வைக்கிறார்.  இதனை சற்றும் எதிர்பாராத அந்த முதியவர் மிருந்த மகிழ்ச்சி அடைகிறார், அருகில் அமர்ந்திருந்த அவரது குடும்பத்தினர் பிறந்தநாள் வாழ்த்து பாடலை பாடுகின்றனர்.  அதனைத்தொடர்ந்து உணர்ச்சிவசப்பட்ட அந்த முதியவர் ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்.


 



இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ இதுவரை 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.  இத வீடியோவுடன் சில குறிப்புகளும் எழுதப்பட்டுள்ளது, '85 வயது தாத்தா இந்த கேக்கை பார்த்து மகிழ்ச்சி அடைகிறார், இதில் அவருக்குள் இருக்கும் ஒரு சிறிய குழந்தை வெளியே வருவதை நீங்கள் பார்க்கலாம்' என்று கூறப்பட்டுள்ளது.  இந்த வீடியோவிற்கு ஒரு பயனர், 'சிறிய செயல்கள் கூட நமது வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சான்றாக உள்ளது' என்று கமெண்ட் செய்துள்ளார்.  மேலும் ஒருவர், 'குழந்தையை நேசிப்பது போல உங்கள் வீட்டில் இருக்கும் முதியவர்களை நேசியுங்கள், நீங்கள் குழந்தையாய் இருந்தபோது அவர்கள் உங்களுக்கு உதவினார்கள், தற்போது அவர்களால் முடியாத போது அவர்களுக்கு வேண்டியதை நீங்கள் செய்து அன்பு செலுத்த வேண்டும்' என்றும் கமெண்ட் செய்துள்ளார்.


மேலும் படிக்க | ஓடும் ஆற்றில் மீன் பிடிக்கும் கரடிகள் - வைரல் வீடியோ 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR