மும்பை: அவ்வப்போது, நாம் சமூக ஊடக ஊடகத்தில் பல்வேறு வைரல் வீடியோக்களைக் காண்கிறோம். பல வீடியோக்கள் நம் மனதில் நீங்கா இடம் பெற்று விடிகின்றன. இப்போது அப்படிப்பட்ட ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சூடான, சுவையான தோசைகளை (Dosa) விற்கும் ஒருவர் இப்போது இணையத்தில் அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளார். ‘பறக்கும் தோசைகளை’ விற்கும் இவர் டிரெண்ட் ஆகி வருகிறார்.


‘ஸ்ட்ரீட் ஃபுட் ரெசிபீஸ்’ என்ற பேஸ்புக் உணவுப் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ உடனேயே வைரலாகியது.


 இந்த வீடியோ தெற்கு மும்பையின் கல்பாதேவி பகுதியில் உள்ள மங்கல்தாஸ் சந்தையில் உள்ள ஸ்ரீ பாலாஜி தோசா கடையுடைய வீடியோவாகும். இந்த தனித்துவமான ‘பறக்கும் தோசை’-யை இருவர் சேர்ந்து செய்கிறார்கள். ஒருவர் தோசையை செய்து காற்றில் அதை பறக்க விடுகிறார். மற்றவர் அதைப் பிடிக்க ஒரு தட்டுடன் அவருக்கு அருகில் தயாராக நிற்கிறார்.


வைரஸ் வீடியோவில் (Viral Video), முதல் நபர் தோசையை செய்வதைக் காண முடிகிறது. தோசையில் உருளைக்கிழங்கு நிரப்பி அதை 2-3 துண்டுகளாக வெட்டி, அவர் அதை காற்றில் பறக்க விடுகிறார். மற்றொருவர் அனாயாசமாக அதை பிடிக்கிறார்.


ALSO READ: கணவர் Like செய்த பெண்களின் படங்களை பிரிண்ட் செய்து பரிசாக வழங்கிய மனைவி!


ஃபேஸ்புக் உணவுப் பக்கம் இந்த வீடியோவை, “பாசைப் போல தோசை சேவை! மும்பை மங்கல்தாஸ் மார்க்கெட்டில் உள்ள ஸ்ரீ பாலாஜி தோசையில் வேற லெவல் பறக்கும் தோசை” என்ற தலைப்புடன் பகிர்ந்துள்ளார்.


 



இந்த வீடியோவை ஏற்கனவே 1.6 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து விட்டனர். மேலும் இந்த தனித்துவமான உணவு ஸ்டண்ட் பற்றி இணையம் முழுவதும் உள்ள உணவுப் பிரியர்களுக்கு இடையே பரபரப்பான விஷயமாக மாறியுள்ளது. இந்த வீடியோவிற்கு உலகெங்கிலும் இருந்து பல லைக்குகளும் கமெண்டுகளும் கிடைத்துள்ளன.


பல நெட்டிசன்கள் (Netizens) தோசை செய்யும் நபரின் திறமையைப் பாராட்டியுள்ள நிலையில், இந்த வீடியோ பல பயனர்களை கோவமூட்டியுள்ளது. இது உணவை ‘அவமதிக்கும்’ விதமாக உள்ளது என்றும் இப்படிப்பட்ட ஒரு விஷயம் தேவையற்றது என்றும் பலர் கூறி வருகின்றனர்.


ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “இதில் என்ன வேடிக்கை? நல்ல உணவை தயாரிக்க இது தேவையா? இது ஒரு சிறந்த திறமை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இது தேவையற்றது” என்று கூறினார். மற்றொருவர் வேடிக்கையாக, “பறக்கும் தோசை காற்றில் கொரோனாவைப் பற்றிக்கொள்ளக் கூடும்” என்றார்.


ALSO READ: Viral Video: திருமணத்தில் குத்தாட்டம் போட்ட தோனியின் மனைவி சாக்ஷி..!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR