ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இந்திரா காந்தி பூங்கா ஒன்று உள்ளது. இங்கு காதல் ஜோடி ஒன்றுக்கு இடையில் தகராறு ஏற்பட்டது. பூங்காவுக்கு வெளியே காதல் ஜோடி ஒருவருக்கு ஒருவர் குறை சொல்லி திட்டிக்கொண்டதுடன் தனது காதலனை மிக ஆபாசமாக திட்டினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனது காதலன் வேறொரு பெண்ணுடன் தன்னை ஏமாற்றி வருவதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததாகவும் அவர் கூறுகிறார். மேலும் அவர் தனது காதலனை கல் எறிந்து அடித்து தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. 


மேலும் படிக்க | கடற்கரையோரம் இறங்கிய இடி - மிரள வைக்கும் நேரடிக் காட்சிகள் 


இதனிடையே அங்கு அருகில் இருந்தவர்கள் திரண்டு வந்து இந்த சம்பவத்தை தங்கள் மொபைல் போனில் வீடியோ எடுக்க தொடங்கினர். இதனால் கோபமடைந்த காதலி அங்கிருந்த ஒருவரின் மொபைல் போனை பறிக்க முயன்றார். அத்துடன் அங்கு பலர் சண்டையை வேடிக்கை பார்த்தபடி சென்றனர். 


இந்த நிலையில் உணவு டெலிவரி செய்யும் நபர் ஒருவர் இளம்பெண்ணை சமாதானம் செய்ய முயன்றுள்ளார். இதனால் உணவு டெலிவரி பாய்க்கும் காதலிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால், அந்த பெண் அந்த வாலிபரையும் தகாத வார்த்தைகளில் திட்ட ஆரம்மித்தார். இறுதியில் அமைதியை இழந்த உணவு டெலிவரி பாய் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் தலையிட்டு அமைதிப்படுத்த முயன்றனர்.


தற்போது இந்த குறித்து போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இளம்பெண் தாக்கப்படும் சம்பவத்தின் வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.


 



 


இந்த சம்பவம் குறித்து பேசிய புவனேஸ்வர் டிசிபி உமாசங்கர் தாஷ்., இது இரு தரப்பினரும் தாக்கிய சம்பவம் என்பதால், அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்ய உள்ளூர் போலீஸ் அதிகாரியிடம் கேட்டுள்ளேன் என்றார்.


மேலும் படிக்க | மாஸ் காட்டிய முதியவர், பாகுபலி ஸ்டைலில் யானை ஏற்றம்: வைரலான வீடியோ 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR