மாஸ் காட்டிய முதியவர், பாகுபலி ஸ்டைலில் யானை ஏற்றம்: வைரலான வீடியோ

Viral Video: சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள வீடியோவில், வயதான முதியவர் ஒருவர், பாகுபலி பாணியில் யானை மீது ஏறி சவாரி செய்யும் காட்சி வெளியாகியுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 1, 2022, 05:05 PM IST
  • இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம்.
  • சமீப காலங்களில் பல வினோத வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
மாஸ் காட்டிய முதியவர், பாகுபலி ஸ்டைலில் யானை ஏற்றம்: வைரலான வீடியோ  title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் பல வினோத வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

சூப்பர் ஸ்டார் பிரபாஸின் 'பாகுபலி 2' படம் அனைவருக்கும் நினைவிருக்கும்.  படத்தில் யானை மீது ஏறி பிரபாஸ் கொடுக்கும் என்ட்ரி அனைவர் கண்களிலும் இன்னும் அப்படியே இருக்கிறது. படத்தின் இந்தக் காட்சி சூப்பர்ஹிட் ஆனது. அந்த காட்சியை மறக்க முடியாது, அதே வேளையில், இதை யாராலும் நிஜ வாழ்வில் செய்து பார்க்கவும் முடியாது. 

ஆனால், இதை நிஜ வாழ்விலும் செய்ய முடியும் என்பதை ஒரு வீடியோ எடுத்துக்காட்டியுள்ளது. தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள வீடியோவில், வயதான முதியவர் ஒருவர், பாகுபலி பாணியில் யானை மீது ஏறி சவாரி செய்யும் காட்சி வெளியாகியுள்ளது. வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சமூகவலைத்தளவாசிகள் பல்வேறு ரியாக்‌ஷன்களை பொழிந்து வருகின்றனர்.

பிரபாஸ் பாணியில் யானை மீது ஏறி சவாரி

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் யானையின் இந்த வீடியோ-வில், சாலையில் யானை நின்றுகொண்டிப்பதை காண முடிகிறது. அப்போது அந்த யானயின் பாகன், பாகுபலி பாணியில் யானையின் தும்பிக்கையின் மீது ஏறி அதன் முதுகில் அமர்வதை காண்கிறோம். யானைபாகன் முதியவராக காணப்படுகிறார். ஆனால், விறுவிறுவென அவர் யானையின் தும்பிக்கையில் ஏறுவதை பார்ப்பதற்கு ஆச்சரியமாக உள்ளது.

மேலும் படிக்க | குதூகலமான குளியல் போட்ட குட்டி யானை! வைரலாகும் வீடியோ

இந்த காட்சி, ‘பாகுபலி 2’ படத்தில் பிரபாஸின் என்ட்ரி போலவே உள்ளது. வீடியோவின் முடிவில், யானை மீது ஏறிய முதியவர் படு ஸ்டைலாக அமர்ந்து சவாரி செய்வதையும் காண முடிகின்றது. 

பாகுபலி பிரபாஸாய் மாறிய முதியவரின் மாஸ் வீடியோவை இங்கே காணலாம்:

பிரபாஸ் மற்றும் ராஜமௌலியும் இதைப் பார்த்தால் ஆச்சரியப்படுவார்கள்

வயதான இந்த யானைப்பாகன் யானை மீது அசால்டாய் ஏறிய இந்த பாணியை பார்த்தால், பாகுபலி நடிகர் பிரபாஸும் இயக்குனர் ராஜமௌலியும் கூட நிச்சயம் ஆச்சரியப்படுவார்கள். இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி திபன்சு கப்ரா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

அவர் தனது ட்வீட்டில் ராஜமௌலி, பிரபாஸ் மற்றும் பாகுபலி படத்தையும் டேக் செய்துள்ளார். இந்த வீடியோ இதுவரை 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. 13 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | பாத்ரூமில் ஷாம்பு இருக்கலாம். பாம்பு இருக்கலாமா? வைரல் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News