கடற்கரையோரம் இறங்கிய இடி - மிரள வைக்கும் நேரடிக் காட்சிகள்

கடற்கரையோரம் திடீரென இறங்கிய இடியின் மிரளவைக்கும் காட்சிகள் காண்போரை வியக்க வைத்துள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 1, 2022, 08:53 PM IST
  • கடற்கரையோரத்தில் இறங்கிய சக்தி வாய்ந்த இடி மின்னல்
  • காண்போரை மிரளவைக்கும் நேரடிக் காட்சிகள்
  • டிவிட்டர் பக்கத்தில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்
கடற்கரையோரம் இறங்கிய இடி - மிரள வைக்கும் நேரடிக் காட்சிகள் title=

மழைக்காலங்களில் இடி-மின்னல் என்பதெல்லாம் சகஜம் என்றாலும், அண்மைக் காலமாக அவற்றின் வீரியம் அதிகம் இருப்பது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு முக்கிய காரணம் காலநிலை மாற்றம். அதிகரித்து வரும் வெப்பத்தால் அண்டார்டிகா பகுதிகளில் பனிமலைகள் வேகமாக உருகத் தொடங்கியுள்ளனர். இதே நிலையில் சென்றால், பூமியில் வரலாறு காணாத மழை மற்றும் வறட்சி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக காலநிலை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இயற்கைச் சமநிலை பாதிக்கும்போது இத்தகைய சவால்களை பூமி எதிர்கொள்ள நேரிடும் என்று அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

மேலும் படிக்க | குதூகலமான குளியல் போட்ட குட்டி யானை! வைரலாகும் வீடியோ

கடந்த நூற்றாண்டுகளில் மழை ஏற்படும்போது இடி மின்னல் ஏற்பட்டால் ஏதாவதொரு பகுதியில் இடி மின்னல் பாதிப்பை கேள்விப்படக்கூடும். ஆனால், இப்போது அதிக இடங்களில் இடி - மின்னல் பாதிப்புகள் ஏற்படுத்துவதை அறிய முடிகிறது. மேலும், அளவுக்கடந்த சத்தத்தையும் அவை ஏற்படுத்துகின்றன. அதனை கேட்கும் மக்களுக்கு ஒரு நொடி மரண பயம் கூட கண்முன்னே வந்து செல்கின்றன. இது குறித்து உலக நாடுகள் ஓர் புள்ளியில் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. இந்த நேரத்தில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வைரலாக பரவியுள்ளது. அந்த வீடியோவில் அமைதி நிறைந்த, மக்கள் நடமாட்டம் இல்லாத கடற்கரையோர பகுதிகளில் மழை பெய்யும் அறிகுறிகள் எழுகின்றன. 

பின்னர், திடீரென வானில் இருந்து நிலத்துக்கு இறங்கும் சக்திவாய்ந்த ஒளி காண்போரை மிரள வைக்கிறது. அந்த ஒளியைத் தொடர்ந்து பயங்கரமான சத்தமும் கேட்கிறது. இந்த வீடியோ நெட்டிசன்களையும் கணகணக்க வைத்துள்ளது. இப்படி சக்திவாய்ந்த மின்னல் மற்றும் இடியை இதன்முன் நேரடியாக பார்த்ததில்லை என்றும் சில நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். டிவிட்டரில் பதிவிடப்பட்ட 4 மணி நேரத்தில் இந்த வீடியோ 20 ஆயிரத்துக்கும் நெருக்கமான பார்வைகளைப் பெற்றுள்ளது. 

மேலும் படிக்க | மாஸ் காட்டிய முதியவர், பாகுபலி ஸ்டைலில் யானை ஏற்றம்: வைரலான வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News