ராேட்டில் அடித்துக்கொண்ட மாணவிகள்! சேரில் அமர்ந்து வேடிக்கை பார்த்த அங்கிள்..வைரல் வீடியோ..
Viral Video : பள்ளி மாணவிகள் சிலர், நடுரோட்டில் அடித்துக்கொள்கின்றனர். அங்கிருக்கும் ஒரு நபர், வேடிக்கை பார்த்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
Viral Video : சமூக வலைதளங்கில் எப்போதும் ஏதேனும் ஒரு வீடியோ வைரலாவது வழக்கமாகி வருகிறது. அதிலும், பெண்கள் அடித்துக்கொள்ளும் வீடியோ இப்போது மிகவும் ட்ரெண்டாகி வருகிறது. ஆண்கள் போல கத்தி-கடப்பாறையை தூக்காமல் முடியை பிடித்து இழுத்து விழுந்து புரண்டு அடித்துக்கொள்கின்றனர், பெண்கள். அது போன்ற ஒரு வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ:
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பள்ளி மாணவிகள் சண்டையிட்டு கொள்கின்றனர். இரு சக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு வரும் ஒருவர், ரோட்டுக்கு நடுவிலேயே வாகனத்தை நிறுத்துகிறார். அவருக்கு பின்னால் பள்ளி மாணவி ஒருவர் அமர்ந்திருக்கிறார். அப்போது, இன்னொரு மாணவி அவர் அருகில் வந்து சண்டை போட ஆரம்பிக்கிறார்.
இவர்களின் வாக்குவாதம் சண்டையாக மாற, அவர் வண்டியை எடுத்துக்கொண்டு கடந்து செல்கிறார். நின்று கொண்டிருந்த மாணவி, பின்னால் இருந்த மாணவியின் பையை பிடித்து இழுத்து விடுகிறார். இதையடுத்து, இவர்களுக்கிடையே சண்டை எழுகிறது.
ஒரு பக்கம் இப்படியொரு களேபரம் நடந்து கொண்டிருக்க, இதையெல்லாம் பார்த்துக்கொண்டு நாற்காலியில் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டிருக்கிறார் ஒரு தாத்தா. இந்த வீடியோ, ஒரு புறம் பார்ப்பதற்கு பயமாக இருந்தாலும், இன்னொரு புறம் பார்ப்பற்கு சிறிப்பாக இருப்பதாக நெட்டிசன்கள் பலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | நடு ரோட்டில் முடியை பிடித்து சண்டை போடும் பெண்கள்! என்ன பிரச்சனை? வைரல் வீடியோ..
மேலும் படிக்க | தாயை பிரிந்த குட்டி யானை! பேருந்தை வழிமறித்து உதவி கேட்கும் வீடியோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ