மிருகக்காட்சி சாலையில் வைக்கப்பட்டு இருக்கும் விலங்குகளை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கமான ஒன்றாகும்.  அந்த சமயத்தில் ஏதேனும் எதிர்பாராத விதமாக சில சம்பவங்கள் நடைபெற்று விட வாய்ப்பு இருக்கிறது.  அதுபோன்ற ஒரு திகிலான சம்பவம் தான் தற்போது நடைபெற்றுள்ளது. ஜமைக்கா பகுதியில் உள்ள உயிரியல் மிருகக்காட்சி சாலையில் உள்ள சிங்கத்திடம் பார்வையாளர் ஒருவர் சிங்கத்தின் வாயில் மாட்டிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தற்போது அந்த திகிலான காட்சி இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க: ஆமை மீது சவாரி செய்யும் அணில்! வைரலாகும் வீடியோ!


அந்த வீடியோவில், ஜமைக்கா உயிரியல் பூங்காவில் ஒரு கூண்டிற்குள் சிங்கத்தை அடைத்து வைத்து இருக்கிறார்கள்.  அப்போது அங்கு வந்த பார்வையாளர் ஒருவர் கூண்டில் உள்ள துவாரத்தின் வழியாக சிங்கத்தை தொட முயற்சிகிறார், தொடர்ந்து சிங்கத்திடம் கையை நீட்டிக்கொண்டு இருக்கிறார்.  அப்போது எதிர்பாராதவிதமாக சிங்கம் அவரது கை விரல்களை கவ்விக்கொள்கிறது, இப்போது சிங்கத்தின் வாய்க்குள் அவரது கை விரல்கள் அகப்பட்டு கொண்டிருக்கின்றன.  அந்த நபர் வலியால் அலறிக்கொண்டு துடிக்கிறார், சிங்கம் அவரின் விரல்களை கடித்து சாப்பிட தொடங்கிவிட்ட்டது.  எவ்வளவு முயற்சி செய்தும் சிங்கத்தின் வாயிலை அகப்பட்டு இருக்கும் அவரது கையை அவரால் எடுக்கமுடியவில்லை.


 



பின்னர் ஒரு வழியாக அவர் சத்தமாக கத்திகொண்டே சிங்கத்தின் வாயிலிருந்த தனது கையை வேகமாக எடுத்து கீழே விழுகிறார்.  எப்படியும் அவரது கையில் இருந்த சதைகளை சிங்கம் தின்றிருக்கக்கூடும், அவரது எலும்புகள் மட்டுமே மிஞ்சியிருக்கலாம்.  இந்த திகிலூட்டும் வீடியோவை இணையத்தில் பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர்.


மேலும் படிக்க: Viral Video: இரு தலைப்பாம்பிடம் சிக்கிய எலி; மனம் பதறச் செய்யும் கொடூர வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR