ராஜ நாகத்தை பாத்ரூமில் வைத்து குளிப்பாட்டும் நபர்! அதிர்ச்சி தரும் வைரல் வீடியோ!
Snake Viral Video: ஒருவர், பயமே இல்லாம் பாம்பை பாத்ரூமில் வைத்து குளிப்பாட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பல வினோதமான நிகழ்வுகள் நடந்து வரும் இந்த உலகில், தினம் தினம் எதுவும் நடக்கவில்லை என்றால்தான் அதிசயமாக உள்ளது. பல கண்டங்களையும் பல்வேறு தரப்பினரையும் நாடுகள் கடந்து ஒன்றிணைத்துள்ளது நம் கையில் உள்ள சிறிய கைப்பேசி. இதன் மூலம் பரவும் பல விஷயங்கள் அவ்வப்போது அனைவரது கவனத்தையும் ஈர்ப்பது வழக்கம். இப்படி வைரலாகும் சில விஷயங்களால் பலர் பயனடைகின்றனர். இருப்பினும் சமூக வலைதளங்களில் மனதை பாதிக்கும் அல்லது மனதை நெருடும் வகையில் பல வீடியோக்களையோ அல்லது போட்டோக்களையோ பார்க்க நேரிடும். அதில் ஒரு சில வீடியோக்கள், பலரை இரவில் தூங்க விடாமல் கூட செய்கின்றன. அப்படிப்பட்ட ஒரு வீடியோதான் தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
பாம்பை குளிக்க வைத்த நபர்..
ஒரு பெரிய ராஜா நாகப்பாம்புக்கு ஒரு நபர் பயமின்றி குளிப்பாட்டும் வினோதமான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தேதி குறிப்பிடப்படாத வீடியோ கிளிப்பில், இவர் தனது செல்லப்பிராணியை குளிப்பாட்டடுவது போல அந்த ராஜ நாகத்தை குளிப்பாட்டுகிறார். இந்த செயலை செய்யும் போது, அவருக்கு எந்த அசௌகரியமோ அல்லது பயமோ இல்லை. மயிர்கூச்சரிய வைக்கும் அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு வகையிலான கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த வீடியோவில், “ஒரு நாகப்பாம்பை குளிப்பாட்டுவது அதன் சருமத்தை பாதுகாக்க உதவும். இது அந்த நாகம் தூய்மையாக இருக்கவும் உதவுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | பணத்தை திருடிக்கொண்டு நைசாக நழுவும் பாம்பு! அதிரவைத்த வைரல் வீடியா!
வைரல் வீடியாே:
19 வினாடிகள் கொண்ட வீடியோவில், அந்த நபர் வாளியில் இருந்து குவளையை வைத்து நாகப்பாம்பு மீது தண்ணீர் ஊற்றுவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. ஒரு கட்டத்தில், குளிப்பாட்டும் அந்த நபர், பாம்பின் தலைக்கும் சேர்த்து தண்ணீர் ஊற்றுகிறார். அந்த பாம்பும் சாதாரணமாக தன்னை சுத்தம் செய்து கொள்கிறது.
இந்த வைரல் வீடியோ X தளத்தில் 10,000 பார்வைகள் மற்றும் டஜன் கணக்கான கருத்துகளுடன் பரவி வருகிறது. இந்த தேவையற்ற செயல் குறித்து பலர் கேள்வி எழுப்பினாலும், சிலர் பாம்பு பிடிக்கும் நபரின் தைரியத்தையும் பயமின்மையையும் பாராட்டினர். இன்னும் சிலர், அந்த வினோதமான காட்சியைக் கண்டு வியந்து வருகின்றனர்.
பாம்புகளுக்கு குளிக்க பிடிக்குமா?
பொதுவாகவே, ஒரு சில உயிரினங்கலுக்கு சுத்தமாக இருப்பது பிடிக்கும். அவ்வப்போது நதிகள், ஆறுகள் அல்லது குளங்களில் அவை நீராடுவது வழக்கமான ஒன்று. ஆனால் ஒரு சில விலங்குகளுக்கு குளிப்பதே பிடிக்காது. பாம்புகள் அப்படியல்ல. இவை ஒரு மாதத்தில் குறிப்பிட்ட அளவிலான தனது தோலினை உரிக்கும். சாதாரணமாக தங்களால் தோலை உரித்துக்கொள்ள முடியவில்லை என்றால், இவை நீராடும். தோலுரித்த பின்னர் குளிப்பதால் இவற்றிற்கு தோளும் சீக்கிரமாக வளரும். மேலும், தோள் வழியாகவே இவற்றால் உடலில் நீரேற்றத்தையும் உறிஞ்சிக்கொள்ள முடியும்.
மேலும் படிக்க | குட்டி நாகத்தை ‘லபக்’கென விழுங்கிய ராஜ நாகம்..! வைரலாகும் ‘திக் திக்’ வீடியோ..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ